காது வலி
வணக்கம் நண்பர்களே..! நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியமான ஒன்று. அந்த உறுப்புகளில் சில நேரத்தில் எதாவது பிரச்சனைகள் வரும். அப்படி வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் காது வலி. அந்த காது வலி வந்தால் நம்மால் தாங்கி கொள்ள முடியாது. அத்தகைய காது வலி வரக்காரணம் நமக்கு சளி பிடிக்கும் போது தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கிவிடும். அதனால் தொண்டையில் இருந்து காது வரைக்கு செல்லும் யூஸ்டேஷியன் என்ற குழாயின் ஒரு முனையில் ஒரு பக்கம் அடைபட்டு விடும். அதனால் காதில் வலி ஏற்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் அழற்சி, சைனஸ் தொற்று, டான்சில்லிடிஸ், மற்றும் அதிக இரைச்சல் இதுபோன்ற பிரச்சனைகளாலும் காது வலி ஏற்படுகிறது. சில நேரத்தில் பல்வலி மற்றும் காதில் எதாவது கட்டி என்றாலும் காது வலி வரும். அப்படிப்பட்ட காது வலியை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்வது எப்படி என்று இன்றைய பதிவை படித்து பயன்பெறுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!
காது வலி குணமாக வீட்டு வைத்தியம்:
கிராம்பு:
காது வலி குணமாக வீட்டில் உள்ள நல்லெண்ணெய் 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் 2 கிராம்பு சேர்த்து நன்றாக அந்த எண்ணெயை கொதிக்க விடுங்கள். அதன் பிறகு அந்த எண்ணெயை ஆறவைத்து வலி இருக்கும் காதில் அந்த எண்ணெயை விட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
பூண்டு எண்ணெய்:
நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயில் இருந்து தயார் செய்யப்பட்ட பூண்டு எண்ணெயை வலி ஏற்பட்டு இருக்கும் காதில் விடும் போது காது வலி குறைய ஆரம்பிக்கும்.
இஞ்சி சாறு:
வீட்டில் இருக்கும் இஞ்சியில் இருந்து சாறு எடுத்து அந்த சாறுடன் கடைகளில் விற்கும் ஆலிவ் எண்ணெய் ஒரு சொட்டு விட்டு பிறகு அந்த இரண்டையும் கலந்து வலி இருக்கும் காதில் ஒரு சொட்டு விடவும். இது மாதிரி செய்தால் வலி மெதுவாக குணமடையும்.
டீ ட்ரீ ஆயில்:
டீ ட்ரீ எண்ணெயை 2 சொட்டு வலி ஏற்பட்டு இருக்கும் காதில் விட்டால் போதும் காது வலி விரைவில் குறையும். ஏனென்றால் டீ ட்ரீ எண்ணெய் ஆனது பொதுவாக காதுகளில் உள்ள தடிப்புகள் மற்றும் அழற்சியினை குறைக்கும் பண்பினை கொண்டது.
தேங்காய் எண்ணெய்:
காதில் எறும்பு மற்றும் பூச்சி புகுந்து இருப்பதால் ஏற்படும் வலியினை குறைப்பதற்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். அதனால் ஆலிவ் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து காதில் விட வலி குறைந்து நல்ல பலனை தரும்.
தலை சுற்றல் நீங்க பாட்டி வைத்தியம் |
ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு பஞ்சு வைத்து நனைத்து காதின் துவாரத்தை மேலோட்டமாக அடைத்து விடுங்கள். சிறிது நேரம் களித்து வலி குறைந்து விடும். அதன் பிறகு அந்த பஞ்சை எடுத்து விடுங்கள்.
நல்லெண்ணெய்:
நல்லெண்ணெய் 1 ஸ்பூன் எடுத்துக்கொண்டு நன்றாக காய்ச்சி பின் அதனை ஆரவைக்கவும். எண்ணெய் ஆரிய பிறகு வலி இருக்கும் காதில் விட்டால் விரைவில் வலி குறைய ஆரம்பிக்கும்.
குறிப்பு: இங்கு கூறப்பட்டுள்ள குறிப்பு சிலருக்கு ஒற்றுக்கொள்ளும், சிலருக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், முதலில் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று அவர்கள் கூறும் சிகிச்சை முறையை பின் தொடர்வது நல்லது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |