உருளைக்கிழங்கு சாப்பிட்டால் மாரடைப்பு வராதாம்..! வேணாமுன்னு ஒதிக்கிடாதீர்கள்

eating potatoes is good for heart disease in tamil

உருளைக்கிழங்குபயன்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆரோக்கியம் பதிவில் உருளைகிழங்கு சாப்பிட்டால் என்ன நன்மை நமக்கு கிடைக்கும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பொதுவாக காய்கறி கடைகளுக்கு சென்றால் உருளைக்கிழங்களை வாங்கிவர மறுப்பார்கள். காரணம் அதனை சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் இதனால் நிறைய விதமான உடல் உபாதைகள் வரும் என்பதால் அதனை வாங்கி வருவதற்கு பெரியவர்கள் மறுத்துவிடுவார்கள். இந்த பதிவின் வாயிலாக உருளைக்கிழங்கு சாப்பிட்டால் என்னென்னெ நன்மைகள் நமக்கு விளைவிக்கிறது என்று தெரிந்துகொள்வோம்..!

உருளைக்கிழங்கு பயன்கள்:

உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் வரும், வாயு பிரச்சனை வரவும் அது மட்டுமில்லாமல் இருதயத்திற்கு பல்வேறு பிரச்சனைகளை நமக்கு அளிக்கிறது என்று தவறாக நினைத்துக்கொண்டு அதனை சாப்பிடுவதை தவிர்த்து கொள்வீர்கள். ஆனால் உண்மையாக சொல்ல போனால் இதயத்திற்கு அதிகளவு நன்மையை அளிக்கிறது உருளைக்கிழங்கு வாங்க தெரிந்துகொள்வோம்..!

உருளைக்கிழங்கு நன்மைகள்:

உருளைக்கிழங்கு நன்மைகள்

எந்த ஒரு பொருளையும் வறுத்து பொரித்து சாப்பிடுவதால் இருதயத்திற்கு கேடு தரும் அதனால் உருளைக்கிழங்கை வறுத்து அல்லது  அவித்து அல்லது  சுட்டு சாப்பிட்டு வருவதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Potassium Benefits in Tamil:

உருளை கிழங்கில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆரோக்கியமான இதயத்திற்கு பொட்டாசியம் சத்து மிகவும் முக்கியம். அது மட்டுமில்லாமல் இதயம் சீராக இயங்க இந்த உருளைக்கிழங்கு உதவுகிறது,

இரத்த அழுத்தம் குறைய உணவு:

இரத்த அழுத்தம்

ஒரு மனிதனின் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று இரத்தம் அதுவும் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் இரத்த ஓட்டம் என்பது எவ்வளவு முக்கியம். இந்த உருளை கிழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் இதயத்திற்கு இரத்தத்தை சீராக செல்ல உதவுகிறது. அதேபோல் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் செய்கிறது.

கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

கெட்ட கொழுப்பை குறைக்கும் உணவுகள்

உருளைகிழங்களில் நார்சத்து அதிகம் இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேராமல் தடுக்கிறது. உடலில் கெட்ட கொழுப்புகள் குறைந்தால் அதுவே மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். அதேபோல் இதய சம்பந்தப்பட்ட நோய் பிரச்சனை வராமலும் முற்றிலும் தவிர்க்கிறது.

பொதுவாக இனிப்பு போன்ற சோடியம் போன்ற சத்துகள் உள்ள பொருட்களை உண்ணக்கூடாது. எனவே சோடிய சத்துக்கள் குறைவாக உருளைக்கிழங்கில் இருப்பதால் இது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.

இதனால் தினசரி உணவில் அளவோடு சேர்த்துக்கொண்டால் உடலுக்கும் இதய சம்பந்தப்பட்ட நோய் பிரச்சனையிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil