Eating These Foods Can Cause Hair Loss in Tamil
ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறதா..? பொதுவாக நம் அனைவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை கட்டாயம் இருக்கும். தலை முடி பிரச்சனை அனைத்திருக்குமே ஏதோ ஒரு விதத்தில் நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். நம்முடைய முடியை நாம் தான் பராமரிக்க வேண்டும். அதுபோல நாம் செய்யும் சில தவறுகளாலும் தலைமுடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.
உதாரணதிற்கு கண்ட ஷாம்புகள் அல்லது எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவது, முடிக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகளாலும் முடி உதிர்வு ஏற்படுகிறது. அதுபோல இதனால் தான் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது என்றும் சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் நாம் உண்ணும் உணவுகளாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அப்படி நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் எது முடி உதிர்வை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம் வாங்க..!
👉பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க.. மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா
முடி உதிர்வை ஏற்படுத்தும் உணவுகள்:
பொதுவாக நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே பல சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அதுபோல முடி உதிர்வு பிரச்சனை அனைவருக்கும் வருவது இயற்கை தான். ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளும் முடி உதிர்வுக்கு காரணம் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா..? அப்படி முடி உதிர்வை ஏற்படும் உணவுகளை இங்கு காணலாம்.
முட்டை : முட்டையில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. அதுபோல முட்டை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது. ஆனால் நாம் முட்டையை பச்சையாக குடிப்பது, அதேபோல் முட்டையின் வெள்ளை கருவை அதிகமாக சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
👉டீயுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்..! உங்களுக்கு தெரியுமா..?
மீன் : மீனில் இருக்கும் சத்துக்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். அசைவ உணவுகளில் மீன் தான் அதிகளவு உண்ணப்படுகிறது. அனால் மீனில் மெத்தில்-மெர்குரி என்ற செறிவு அதிகமாக காணப்படுகிறது. அதனால் நாம் மீனை அதிகமாக உட்கொள்ளும் போது இந்த சேர்மம் அதிகமாக மாறுகிறது. அதனால் தலைமுடி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை : நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் என்றால் அது சர்க்கரை தான். டீ என்றால் அதில் கட்டாயம் சர்க்கரை இருக்கும். சர்க்கரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் என்ன பிரச்சனை வரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் சர்க்கரை முடி உதிர்வை ஏற்படுத்தும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை. நாம் சர்க்கரையை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளும் போது அது தலைமுடி உதிர்வை ஏற்படுத்துகிறது.
👉முள்ளங்கி சாப்பிடும் போது இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடவேக்கூடாது
குளிர்பானங்கள் : இந்த வெயில் காலத்தில் அதிகம் அருந்துவது குளிர்பானங்களை தான். குளிர்பானங்கள் என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் குளிர்பானங்கள் முடி உதிர்வை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. காரணம் குளிர்பானங்கள் இன்சுலின் அளவை பாதிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு முடி உதிர்வு போன்ற தலைமுடி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 | Health tips tamil |