தூங்கும் போது போனை பக்கத்தில் வைத்து தூங்குவீர்களா..! அப்போ இது உங்களுக்கானது

Advertisement

மொபைல் போன் தீமைகள்

இன்றைய பதிவில் மொபைல் போன் உறங்கும் போது பக்கத்தில் வைத்திருந்தால் என்னென்ன தீமைகள் என்று தெரிந்து கொள்வோம். இன்றைய உலகில் android போனை பயன்படுத்தாமல் யாரும் இல்லை. அனைவருக்கும் உலகமே போன் தான். இதை அதிகம் பயன்படுத்துவதே உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். அதில் தூங்கும் போது பக்கத்தில் போன் இருந்தால் தான் சில பேர் தூங்குவார்கள். அவர்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பதிவை படித்த பிறகாவது போனை தூங்கும் போது பக்கத்தில் வைக்காமல் இருங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ மொபைல் அதிக நேரம் பயன்படுத்தினால் ஏற்படும் பின்விளைவுகள்..!

உறங்கும் போது போன் வைத்திருந்தால் வரும் தீமைகள்:

தூங்கும் போது போனை பக்கத்தில் வைத்தும் தூங்க கூடாது. தலையணை அடியிலும் வைத்து தூங்க கூடாது. போனிலிருந்து வரும் Radiation அதிகமாக இருக்கும். கதிர்வீச்சு உடலில் தேவையில்லாத செல்களை தூண்டும். இதனால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரும். 

போன் தூங்கும் போது அருகில் இருந்தால் தலைவலி, தூக்கமின்மை, கனவுகள் என்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தூங்கும் நேரத்தில் போனை எப்படி வைக்க வேண்டும்:

தூங்கும் போது போனை Network connection off செய்து விட்டு தூங்க வேண்டும்.

தூங்கும் இடத்திற்கும் போனுக்கும் கொஞ்ச தூரம் தொலைவு இருக்க வேண்டும்.

பேண்ட் பாக்கெட் அல்லது சட்டை  பாக்கெட்டில் போன் வைக்கலாமா.! 

ஆண்கள் பலரும் போனை பேண்ட் பாக்கெட்டில் தான் வைப்பார்கள். இந்த மாதிரி வைப்பது உடல் உறுப்புகளை பாதிக்க செய்யும். போனிலிருந்து வரும் வெப்பமானது உடலில் இருக்கும் செல்களை அழிக்கும். முக்கியமாக ஆண்கள் பேண்ட் பாக்கெட்டில் போனை வைப்பதால் ஆண்மை குறைபாடு பிரச்சனை ஏற்படும்.

சட்டை பாக்கெட்டில் போனை வைக்கும் போது போனிலிருந்து வரும் வெப்பம் மன அழுத்தம் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உங்களை சோர்வு நிலையிலே வைத்திருக்கும்.

அதிக நேரம் போன் பயன்படுத்தலாமா.!

அதிக நேரம் போன் பயன்படுத்தினால் மலசிக்கல், ஆண்மை குறைபாடு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே போனை இனிமேலாவது தூங்கும் போது அருகில் வைக்காமல் தூங்குங்கள். இன்னொன்று போனை அதிக நேரம் பயன்படுத்தாதீர்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement