முட்டையை இவ்ளோ நாளா இப்படி தான் சாப்புடுறீங்களா..! இனியாவது எப்படி சாப்பிடனும்னு தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

முட்டை சாப்பிடுவது

இன்று மட்டும் இல்லாமல் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே முட்டை மிகவும் சத்தான  பொருளாக தான் கருதப்படுகிறது. அதனால் மருத்துவர்கள் கூட அதிகமாக முட்டையினை தான் ஆலோசனை செய்கிறார்கள். பொதுவாக முட்டை என்றாலே நாட்டுக்கோழி முட்டை தான் உடலுக்கு நல்லது பிராய்லர் கோழி முட்டை உடலுக்கு கேட்டது என்றும் நாம் இதுநாள் வரையிலும் நினைத்து கொண்டு இருக்கிறோம். அதனால் அதிகமாக நாட்டுக்கோழி முட்டையினை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் முட்டையினை அவித்து மட்டும் நாம் சாப்பிடுவதில்லை. முட்டை ஆம்லெட், முட்டை பொரியல், முட்டை வறுவல் மற்றும் முட்டை தொக்கு போன்ற முறைகளில் தான் நாம் நமக்கு பிடித்தவாறு சமைத்து சாப்பாட்டு வருகிறோம். ஆனால் இதுமாதிரி முறைகளில் சாப்பிடுவதனால் நமது உடலுக்கு சில பக்க விளைவுகள் வரக்கூடும். அதனால் முட்டையினை சாப்பிடும் முறை மற்றும் அளவு பற்றி இன்று தெரிந்துக்கொண்டு அதனை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் வாருங்கள்.

முட்டையில் உள்ள சத்துக்கள்: 

முட்டையில் உள்ள சத்துக்கள்

முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. அதிலும் மஞ்சள் கருவில் 2.8 கிராம் புரோட்டீனும் மற்றும் வெள்ளை கருவில் 3.5 கிராம் புரோட்டீனும் நிறைந்து இருக்கிறது.

முட்டையின் வெள்ளை கரு:

முட்டையின் வெள்ளை கருவில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:

  • மெக்னீசியம்
  • பொட்டாசியம்
  • குளோரின்
  • சல்பர்
  • சோடியம்
  • சிங்க்

முட்டையின் மஞ்சள் கரு:

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு:

  • வைட்டமின் A
  • வைட்டமின் B6
  • வைட்டமின் B12
  • வைட்டமின் D
  • வைட்டமின் K
  • வைட்டமின் E

இதையும் படியுங்கள்⇒ தினமும் பால் குடிப்பவர்களுக்கு முக்கியமான தகவல்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!

முட்டை சாப்பிடும் முறை:

முட்டை சாப்பிடும் முறை

முட்டை நமது உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அதனை நாம் நமக்கு பிடித்த முறைகளில் சாப்பிட கூடாது. ஏனென்றால் நாம் சரியான முறையில் முட்டையினை சாப்பிடாதபோது நமது உடலில் பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடும்.

ஒரு வாரத்திற்கு 4 முதல் 7 முட்டைகளை நாம் சாப்பிடுவதன் மூலம் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் 75% வராது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

 அதுபோல முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் தான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் முட்டையின் வெள்ளை கரு நமது உடலில் கரோட்டின் ஆய்டு உறிஞ்சுதலை அதிகரிக்க செய்து இரத்தத்தின் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.  

அதுமட்டும் இல்லாமல் நமது உடல் தமணிகளில் கொழுப்புகள் போய் சேராமல் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் இந்த முட்டையின் வெள்ளை கரு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

ஆகவே முட்டையின் வெள்ளை கருவினை நாம் சேர்த்து கொள்வதன் மூலம் இளைஞர்களுக்கு வரும் மாரடைப்பினை தவிர்க்க முடியும் என்று ஆய்வின் மூலம் கூறப்படுகிறது. அதனால் போதுமான அளவு முட்டையின் வெள்ளை கரு சாப்பிட வேண்டும்.

மேலும் நாம் முட்டை சாப்பிடுவது மட்டும் ஆரோக்கியம் கிடையாது. அதனை எப்படி சரியான முறையில் சாப்பிடுகிறோம் என்பதில் தான் நமது ஆரோக்கியம் உள்ளது.

இதையும் படியுங்கள்⇒ எந்த வயதில் குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் தெரியுமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement