கருப்பு எள் தீமைகள் | வெள்ளை எள் தீமைகள் | Ellu Theemaigal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். எள்ளில் மூன்று வகைகள் உள்ளது. செம்மை, கருப்பு மற்றும் வெள்ளை என மூன்று வகைகள் உள்ளது. எல் இந்தியா முழுவதும் பயிரிப்படுகிறது. பெரும்பாலும் கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் தான் அதிகம் பயன்படுத்துவோம். எள்ளில் பல நன்மைகள் இருந்தாலும், இதனை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடலிற்கு ஒரு சில தீமைகளும் வர தான் செய்கிறது. எள்ளில் பல விதமான உணவுகள் செய்வார்கள். எள்ளு துவையல், எள்ளு மிட்டாய் என பல உணவு பொருட்கள் செய்வார்கள். இதனை நாம் அடிக்கடி அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் ஒரு சில ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இப்பதிவின் வாயிலாக கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் எதுவாக இருந்தாலும் அதனை அதிகமாக உட்கொண்டு வந்தால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Ellu Theemaigal in Tamil | எள் தீமைகள்:
அழற்சி பிரச்சனை:
எள்ளு ஆனது, பலபேருக்கு அழற்சி பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். எள்ளினை நாம் அன்றாடம் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள எண்ணெய் செரிமான பிரச்சனைகள், மூக்கு ஒழுகல், கண் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
குடல்வால் தொற்று மற்றும் குடல் புற்றுநோய்:
எள்ளினை அதிகமாக சாப்பிட்டு வந்தால் குடல்வாலில் தொற்று ஏற்படக்கூடும். எள்ளினை சாப்பிடும்போது, குடல்வாலில் தேங்கி கொண்டு அந்த இடத்தில் தொற்றினை உண்டாக்கும். இதனை தவிர எள்ளினை சாப்பிட்டால் குடல் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எள்ளு கனவில் வந்தால் இதுதானா பலன்..!
வயிற்றுபோக்கு:
எள்ளில் மலமிளக்கும் பண்புகள் உள்ளது. எனவே, எள்ளினை மிதமான அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். அதுவே, எள்ளினை அதிகமாக சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
கருச்சிதைவு:
எள்ளு கருச்சிதைவை உண்டாக்கும். எனவே, கர்ப்பகாலத்தில் எள்ளினை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் முக்கியமாக கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதத்தில் எள்ளினை அறவே சாப்பிட கூடாது.
சரும பிரச்சனைகள்:
எள்ளு விதைகளை அதிகமாக உட்கொண்டு வந்தால் சருமம் சிவத்தல்,அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட கூடும். மேலும், எள்ளினை அதிகமாக சாப்பிட்டால் தூக்க உணர்வை ஏற்படுத்தும்.
மார்பக புற்றுநோய்:
பல ஆய்வுகளில், எள்ளினை அதிகமாக சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய்க்கு வழிவகிக்கும் என்று கூறப்படுகிறது. இது, மார்பக செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும், எள்ளிலிலுள்ள கொழுப்புகள் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
வெள்ளை எள் சாப்பிடுவதால் உடலிற்கு இவ்வளவு நன்மைகளா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |