எருக்கன் செடியின் நன்மைகள்
வெள்ளை எருக்கன் செடியில் அதிக நன்மைகள் உள்ளன. இது மருத்துவப் பயன்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது வறண்ட நிலப்பகுதியில் கூட வாழும் தன்மை உடையது. ஆஸ்துமா சுவாச பிரச்சனைகளுக்கு வெள்ளை எருக்கன் செடியை பயன்படுத்துகின்றன. எருக்கன் செடி 12 ஆண்டுகள் வரை தண்ணீர் இல்லாமல் வாழும் தன்மையை கொண்டுள்ளது. எருக்கன் செடியில் பால் வடியும் தன்மை இருப்பதால் அதனை கவனமாக பயன்படுத்தவும். வெள்ளை எருக்கன் செடியில் இலை,பூ,காய்,வேர் போன்ற அனைத்தும் மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகிறது. எருக்கன் செடி (வெள்ளை எருக்கு,நீல எருக்கு) என இரண்டு வகைப்படும். அதில், வெள்ளை எருக்கு மருத்துவப் பயனைக்கொண்டுள்ளது.
மேலும்,சித்த மருத்துவத்தில் வெள்ளை எருக்கன் செடியின் பூவின் மூலம் மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. காலில் முள் குத்தினால் எருக்கன் செடியின் பாலை எடுத்து முள் குத்திய இடத்தில் தடவினால் கால் வலி குறைந்து முள் வெளியில் வந்துவிடும் என்று கூறப்படுகிறது. குதிங்கால் வலி இருப்பவர்கள் ஒரு செங்கலை சூடு பண்ணி இரண்டு எருக்கன் இலையை எடுத்து விளக்கெண்ணெய் தடவி அதன்மேல் போட்டு கால் சூடு பொறுக்கும் அளவுக்கு ஒத்தடம் கொடுத்தால் குதிங்கால் வலி குறையும்.
எருக்கன் செடியின் மருத்துவப் பயன்கள்:

- வெள்ளை எருக்கன் செடி பாம்பு கடி ,எலி கடிக்கு,தேள் கடி போன்றவைக்கு மருந்தாக பயன்படுகிறது.
- எருக்கன் செடி மூட்டு வலி, சுளுக்கு போன்ற உடல் வலிகளுக்கு வலி நிவாரணியாக திகழ்கிறது.
- பொடுகு,படை போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- எருக்கன் இலை இன்சுலின் எதிர்ப்பை குறைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.
- வெள்ளை எருக்கன் செடியில் இருக்கும் பூக்கள் ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்துகிறது.
எருக்கன் செடியின் தீமைகள்:
- எருக்கன் செடியின் பால் கண்ணில் பட்டாள் கண்ணில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
- கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்க்கவும்.
- எருக்கன் செடியை உடைக்கும் போது அதனுடைய பால் தோலில் பட்டாள் அரிப்பை உண்டாக்கும்.
- இதிலிருந்து வரும் பாலை உட்கொண்டால் உடல்ரீதியாக கடும் பிரச்சனைகள் வரக் கூடும்.
- எருக்கன் செடியை சித்த மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு பயன்படுத்த வேண்டும். சிறுவர்களை எருக்கன் செடி பக்கத்தில் போகவிடக் கூடாது.
வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் வளர்த்தால் என்ன பயன் கிடைக்கும் :
வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் வளர்க்கலாம். ஏனென்றால், எருக்கன் செடி ஆன்மிக ரீதியாக நல்ல பலனை தரும் என்று கூறப்படுகிறது. இந்த செடியை வீட்டின் முன் வளர்ப்பதன் மூலம் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பையும் பெருக்க உதவுகிறது. வெள்ளை எருக்கன் செடி ஒரு தெய்வீக ஆற்றலை கொண்டுள்ளது. இந்த செடியை வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. வெள்ளை எருக்கன் பூவை விநாயகர் மற்றும் சிவனுக்கு பயன்படுத்துகின்றனர்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |











