நடைப்பயிற்சி:
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்…!. உயிர் வாழ்வதற்கு உணவு, ஆரோக்கியம் இவை இரண்டுமே முக்கியம். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலையில் நடை பயிற்சி செல்வது நல்லது. கை, கால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, கழுத்து வலி, எடை குறைவு இதுபோல பல வகையான நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்ள தினமும் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர்.
உங்களுடைய ஆயுள் காலத்தை அதிகரிக்க வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலையில் இந்த 5 விதமான நடைப்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதும். உங்களுடைய ஆயுள் காலம் அதிகரிக்கும். தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலம் வாங்க..!
1 வாரத்தில் உடல் எடை குறையணுமா..! |
காலை நடைப்பயிற்சி நன்மைகள்:
தினமும் காலையில் கண் விழித்ததும் காபி, டீ கப்பை தேடுபவர்களை விட footwear கட்டிக் கொண்டு வாக்கிங் செல்பவர்களே அதிகம். அப்படி தினமும் வாக்கிங் செல்வதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும். காலையில் எழுந்தவுடன் வேக வேகமாக ஓடுவது உடலில் தேவையில்லாத கொழுப்பை போக்குவது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது, உடலை சுறுசுறுப்பாக வைப்பதற்கும் உதவுகிறது.
மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றை குறைப்பதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் ஆய்வில் கூறப்படுகிறது.
உடலின் ஆயுள் காலத்தை அதிகரிக்கக்கூடிய நடைப்பயிற்சி:
தினமும் 10 நிமிடத்திற்கு விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த லீசெஸ்டெர் என்பவர் ஆய்வு செய்துள்ளார். மெதுவாக நடைப்பயிற்சி செய்பவர்களை விட, விறுவிறுப்பாக நடைப்பயிற்சி செய்பவர்களின் ஆயுள்காலம் 20 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.
நடைப்பயிற்சி பயன்கள்:
தினமும் காலை, மாலை என இரண்டு முறை நடைப்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு இருமடங்கு பயன்களை தரும். காலையில் வேலைக்கு செல்லுதல், பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்பிவிடுதல், வீட்டு வேலை என்று நிறைய இருக்கும். அதனால் இனிமையான காலை பொழுதில் வேக வேகமாக நீங்கள் நீண்ட தூரம் நடப்பதை விட காலை, மாலை என பிரித்து நடைப்பயிற்சி செய்யலாம்.
இரவு உணவு உண்ட பிறகு உடனே படுத்து உறங்காமல் சிறிதுநேரம் நடப்பதனால் உடலின் இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என ஆராய்ச்சிகள் சொல்லப்படுகிறது.
சக்தி நடைப்பயிற்சி:
உங்களுக்கு நடைப்பயிற்சி செய்வது ஒருகால கட்டத்திற்கு மேல் சலிப்பாக இருப்பது போல் தோன்றும். அப்படி இருக்கும் நேரத்தில் உங்களுடைய நடைப்பயிற்சியை சவாலானதாக மாற்றவேண்டும். அதற்கு நீங்கள் கையில் குறைந்த அளவிலான எடையை எடுத்துக்கொண்டு நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் கடின உழைப்போடு கூடுதல் கலோரிகளை எரிக்கவும் வழிவகை செய்கிறது.
வேகத்தை அதிகரிக்க:
நடைப்பயிற்சி செய்யும்போது உங்களின் வேகத்தை அதிகரிப்பது உடலுக்கு மேலும் சில நன்மையை தருகிறது. வேக வேகமாக நடப்பது பிடிக்கவில்லையென்றால்
கொஞ்சம் ஓடுவது போன்ற நிலையில் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் இதய துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும். வயது அதிகம் உள்ளவர்கள் இந்த முறையினை பின்பற்றமுடியவில்லையென்றால் வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்வதற்க்கு இடையில் 20 நிமிடங்கள் மட்டும் அதிக வேகத்துடன் நடந்தால் போதும்.
இயங்கும் படிக்கட்டு:
தினமும் நடைப்பயிற்சி செய்துவிட்டோம் என்று நீங்கள் அலுவலகம் மற்றும் பெரிய கடைகளுக்கு செல்லும்போது படிக்கட்டுகளில் நடக்காமல் இருக்க கூடாது. ஆகவே படிக்கட்டுகளில் ஏரி, இறங்கும் போது தான் உடலில் தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். லிப்ட் மற்றும் இயங்கும் படிக்கட்டுகளில் நடப்பதை தவிர்க்கவும்.
செல்ல பிராணியுடன் நடைப்பயிற்சி:
தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்லும்போது உங்களுக்கு தனிமையாக இருப்பது தோன்றினால் வீட்டு செல்ல பிராணி நாய் குட்டியை அழைத்துசெல்லலாம். சிறுது நேரம் அதனுடன் நீங்கள் விளையாடுவதால் மகிழ்ச்சியாக இருக்கும்போது இதய துடிப்பை அதிகரிக்கவும், மனநிலையை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |