இந்த ஜூஸை மட்டும் குடித்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க நம்ம முகமா என்று.!

Advertisement

Face Glowing Juice

அனைவருக்கும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். இதற்காக கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் ரிசல்ட் கிடைக்கும். ஆனால்  எப்பொழுதும் முகம் பளப்பளப்பாக இருக்காது. கிரீம்களை பயன்படுத்தும் போது மட்டும் தான் முகம் பளபளன்னு காட்சியளிக்கும்.  அதனால் உங்களின் முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்க சில ஜூஸ்களை குடிக்க வேண்டும். அது என்னென்ன ஜூஸ் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

எலும்பிச்சை மற்றும் தேன்:

முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்

 தோல் நோயை உண்டாக்கும் பூஞ்சை வளர்ச்சிக்கு எதிராக எலுமிச்சை சாறு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. மேலும்  இதில் வைட்டமின் சி இருப்பதால்  சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. மற்றும் ஆரோக்கியமான சரும செல்களின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது சருமத்தில் இருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குவது , முகப்பரு வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் பள்ளங்களை அகற்ற உதவுகிறது. 

வாரம் 1 முறை மட்டும் இந்த ஜூஸ் குடியுங்கள், அப்புறம் சொல்வீங்க ஒரு முடி கூட கொட்டவில்லை என்று..!

ஜூஸ் செய்வது எப்படி.?

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறியதாக உள்ள ஒரு எலும்பிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஆரஞ்சு அல்லது மாதுளை:
முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்

 ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை  தடுக்க உதவுகின்றன, மாதுளை தோல் செல்களை புதுப்பிக்க உதவும் வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, ஆரஞ்சுகளில் வைட்டமின் சி உள்ளது, இது உங்கள் சருமத்தில் ஃப்ரீ ரேடிக்கல் செயல்பாட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது.  

ஜூஸ் செய்வது எப்படி.?

ஆப்பிள் அல்லது மாதுளை அல்லது ஆப்பிள் ஏதவாது ஒரு பழத்தை தோலை உரித்து ஜூஸாக அடித்து கொள்ளவும். பின் வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

கேரட் மற்றும் பீட்ரூட்:

முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்

கேரட் மற்றும் பீட்ரூட் சாறு தோல் பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த சாறு உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. இரண்டு காய்கறிகளும் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்குகிறது மேலும், மென்மையாகவும், மிருதுவாகவும் ஆக்குகிறது.

ஜூஸ் செய்வது எப்படி.?

கேரட் அல்லது பீட்ரூட் ஏதவாது ஒன்றை எடுத்து தோலை உரித்து கழுவி மிக்சியில் அரைத்து கொள்ளவும். இதனை வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

தேங்காய் தண்ணீர்:

முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும்

தேங்காய் நீர் சத்துக்களின் நிறைந்தது. இதில் வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் சி அதிகம் உள்ளது. தேங்காய் நீரை தொடர்ந்து குடிப்பதால் சரும வறட்சியை தடுக்கிறது, சருமத்தின் பளபளப்பாக மாற்றுகிறது.

முகம் பளபளப்பாக தேங்காய் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும்.

அடர்த்தியாக முடி வளர, பொலிவான சருமம் பெற இதை செய்து சாப்பிடுங்க

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement