சோர்வு நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க இதை மட்டும் பண்ணுங்க..!

உடல் சோர்வு குறைய

ஆரோக்கிய குறிப்புகள் – உடல் சோர்வு குறைய (Fatigue treatment)..!

எப்பொழுதும் நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும், இல்லையெனில் அதுவே நமக்கு உடல் சோர்வை ஏற்படுத்திவிடும், இந்த உடல் சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா?.. அப்படி என்றால் கண்டிப்பாக இதை மட்டும் செய்யுங்கள் போதும், உடல் சோர்வு குறைந்து, உடல் ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும்.

சரி வாங்க உடல் சோர்வு குறைய என்னே செய்ய வேண்டும் என்பதையும், இந்த உடல் சோம்பல் வர காரணம் என்ன ? என்பதையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

இதையும் படிக்கவும் –>  தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை? முழு விளக்கம்..!

ஆரோக்கிய குறிப்புகள் – உடல் சோர்வு குறைய (Fatigue treatment)..!

முதலில் சோம்பல் வர காரணம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சோம்பல் வர காரணம்:

அதிக வேலை, அதிக நேரம் பயணம் செய்வது, வயது போன்ற காரணங்களுடன், சில ஆரோக்கிய பிரச்சனைகளான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு நோய், இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளினாலும் இந்த உடல் சோம்பல் வர காரணங்கள் என்று சொல்லலாம்.

உடல் சோர்வு அறிகுறி:

காலை எழுந்தவுடன் கை, கால் வலி அல்லது குடைச்சல், தசைகளில் அதிக வலி போன்ற அறிகுறிகள் உடல் சோர்வடைந்ததற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.

சரி இப்போது உடல் சோர்வு குறைய அருமையா மற்றும் சுவையுள்ள லேகியம் மிக எளிமையான முறையில் நம் வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. மிளகு – இரண்டு ஸ்பூன்
  2. நெய் – 25 கிராம்
  3. வெல்லம் – 30 கிராம்

உடல் சோர்வு குறைய லேகியம் செய்முறை:

கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு, நெய் உரிக்கியதும், இரண்டு ஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்க வேண்டும்.

வறுத்த மிளகை பின் பொடி செய்து கொள்ளவும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும், பின்பு அவற்றில் வெல்லத்தை சேர்த்து உருக்க வேண்டும். வெல்லம் உருகியதும். பொடித்து வைத்துள்ள மிளகு தூளை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வரை காத்திருக்கவும்.

அதன் பிறகு 30 மில்லி நெய் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு 2 நிமிடங்கள் வரை கிளறிவிடவும்.

இந்த கலவையானது லேகியம் பதத்திற்கு வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

பின்பு லேகியம் ஆறியதும், ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து தினமும் ஒரு ஸ்பூன் காலை வேளையில் சாப்பிட்டு வர வேண்டும்.

இவ்வாறு தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியமாகவும், உடல் சுறுசுறுப்பாகவும் காணப்படும்.

இதை தவிர்த்து மேலும் சில விஷயங்களை தினமும் நாம் பின் பற்ற வேண்டியது மிகவும் அவசியம், அவை என்ன என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க.

இதையும் படிக்கவும் –> தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் ? அற்புத நன்மைகள்..!

ஆரோக்கிய குறிப்புகள் – உடல் சோர்வு குறைய (Fatigue treatment)..!

உடல் சோர்வு குறைய – உடற்பயிற்சி:

சோர்வை போக்க தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

உடல் சோர்வு நீங்க தண்ணீர்:

உடலுக்கு தண்ணீர் போதிய அளவில் இருந்தால் தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்து வாருங்கள். இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

உடல் சோர்வு குறைய – தூக்கம்:

தூக்கமின்மை காரணமாக கூட உடல் சோர்வு ஏற்படும், மேலும் உடலில் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும்.

உடல் எடை அதிகமானாலும் உடலில் சோம்பல் ஏற்படும்:

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள்.

உடல் சோர்வு குறைய – அடிக்கடி சாப்பிட வேண்டும்:

சோர்வை போக்க கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடவும் மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும்.

இப்படி சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

அதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது.

காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலேயே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

இதையும் படிக்கவும்–> சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று குடித்தால் போதும்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ரங்கோலி, ஆன்மிகம் மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.