Fish Oil Capsules Side Effects in Tamil | மீன் எண்ணெய் மாத்திரை தீமைகள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மீன் எண்ணெய் மாத்திரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் உடலிற்கு தீமைகள் பற்றி தான் பின்வருமாறு விவரித்துள்ளோம். மீன் எண்ணெய் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதனை பற்றி முழுவதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக மீன் எண்ணெய் மாத்திரையின் தீமைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நம்மில் பலரும் மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிட்டு இருப்போம். இதில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் உடலிற்கு ஏற்படும் பக்கவிளைவுகள்/தீமைகள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க மாட்டோம். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Fish Oil Capsules Side Effects in Tamil பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நீங்கள் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுபவராக இருந்தால் அதன் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மீன் எண்ணெய் மாத்திரை பெயர்:
மீன் எண்ணெய் மாத்திரை ஆனது Fish Oil அல்லது ‘காட் லிவர் ஆயில்’ (Cod liver oil) என்றும் அழைக்கப்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரை ஆனது, ஒமேகா 3 அதிகமுள்ள பெரிய மீனான சால்மன், மத்தி மற்றும் திமிங்கலம் போன்ற மீன்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக திமிங்கலத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.
மீன் எண்ணெய் மாத்திரை தீமைகள்:
குறைந்த இரத்த அழுத்தம் உண்டாகும்:
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது. ஏனென்றால், மீன் எண்ணெய் இரத்த அழுத்ததை குறைக்கும் தன்மை கொண்டது. இது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கும். ஆனால், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது அல்ல. எனவே, மீன் எண்ணெய் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு:
அதிகளவு மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, நீரிழிவு நோயாளிகள் மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அல்லது மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்வது நல்லது.
வயிற்றுபோக்கு:
மீன் எண்ணெய் மாத்திரையை அதிகம் உட்கொண்ட நபர்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், இரைப்பை குடம் பிரச்சனைகளும் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் உண்டாகக்கூடும்.
சால்மன் மீன் நன்மைகள் | சால்மன் மீனில் இவ்ளோ நல்லதா?
இரத்தப்போக்கு:
மீன் எண்ணெய் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டால் பல் ஈறுகள் மற்றும் மூக்கில் இரத்த வடிதல் பிரச்சனை உண்டாகும். இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடுவது நல்லது.
தூக்கமின்மை பிரச்சனை:
மீன் எண்ணெய் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மீன் எண்ணெய் மாத்திரை எப்போது சாப்பிட வேண்டும்.?
மருத்துவரின் பரிந்துரைப்படி மீன் எண்ணெய் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |