ஆளி விதையில் இவ்வளவு மருத்துவ குணங்களா..!

Advertisement

ஆளி விதை மருத்துவ குணங்கள் / Aali vithai payangal..!

அனைவருக்கும் வணக்கம்..! ஆளி விதை என்பதை சிறிய அளவில் ப்ரௌன் நிறத்தில் காணப்படும். இந்த ஆளி விதையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஆளி விதையில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

ஆரோக்கியம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து சாப்பிடலாம், முளைக்கட்ட வைத்து சாப்பிடலாம் அல்லது உணவில் தூவி சாப்பிடலாம். இருப்பினும் இந்த ஆளி விதையை பொடி செய்து அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதினால் உடலுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்கும். ஓகே இப்போது ஆளி விதை மருத்துவ குணங்கள் மற்றும் ஆளி விதை சாப்பிடும் முறை (aali vithai sapidum murai) பற்றி பார்க்கலாம் வாங்க..! 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆளி விதை பயன்கள்

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 1

Flax seeds benefits / aali vithai uses in tamil – ஆளி விதை மருத்துவ குணங்கள் இதைய நோய் உள்ளவர்கள், இதைய நோய் நமக்கு வராமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோர், இவர்கள் அனைவரும் அவசியம் இந்த ஆளி விதையினை தினமும் சாப்பிடுவதினால் இதைய நோய் சம்மந்தப்பட்ட எந்த நோயும் அவர்களை தீண்டாமல் பாதுகாக்கும்.

ஆளி விதையை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அவித்து சுண்டல் போல் தாளித்து சாப்பிடுவதினால் இதயத்தை பாதுகாக்கும். மேலும் மூளைக்கு சக்தியை அதிகரிக்கும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 2

Flax seeds benefits / aali vithai uses in tamil – பக்கவாதம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆளி விதையை தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட்டுவர பக்கவாதம் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 3

ஆளி விதை பயன்கள் – சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிட்டுவர சிறுநீரகத்தில் ஏற்படு அழற்சியை குறைக்கும்.

சிறுநீரகம் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படும். எனவே சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுங்கள்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 4

மலச்சிக்கலால் அவஸ்த்தைப்படுபவர்கள் தினமும் ஆளிவிதையை சாப்பிட்டு வர. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் ஆளி விதை பாதுகாக்கும். இந்த ஆளி விதையை சாப்பிட்ட பிறகு தேவையான அளவு நீரினை பார்க்கவேண்டும். இல்லையெனில் அதுவே மலச்சிக்கல் அல்லது வாயு தொல்லையை உண்டாக்கிவிடும்.

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 5

சில பெண்களுக்கு ஹார்மோன்கள் குறைப்பாட்டினால் முடி கூட்டுதல், உயர் இரத்த அழுத்தம், மனஉளைச்சல் இவை அனைத்தும் ஏற்படும். இப்படி பட்டவர்கள் தினமும் ஆளி விதையை ஒரு கையளவு சாப்பிட்ட்டுவர உடலுக்கு தேவையான ஹார்மோன்களை வழங்கும்.

குறிப்பாக ஆளி விதை மாதவிடாயை ஒழுங்குபடுத்தும், அந்த சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலை வலி, பதற்றம் போன்ற பிரச்சனைகளை இந்த ஆளி விதை கட்டுப்படுத்தும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

ஆளி விதை மருத்துவ குணங்கள்: 6

Flax seeds benefits – இந்த ஆளி விதை மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

எனவே புற்று நோய் நமக்கு வராமல் இருக்க தினமும் இந்த ஆளி விதைகளை ஒரு கையளவு அவித்தோ அல்லது பொடி செய்தோ சாப்பிடுங்கள்.

Flax Seeds Benefits in Tamil: 7

பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். மேலும் அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

ஆளி விதையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

ஆளி விதை மருத்துவ குணங்கள் – 100 கிராம் ஆளிவிதை 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து,  530 கலோரி சக்தி, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

ஆளி விதை சாப்பிடும் முறை / aali vithai sapidum murai:

Flax seeds uses – ஒரு கையளவு விதையை எடுத்து மிக்ஷி ஜாரில் சேர்த்து பவுடர் போல் நைசாக அரைத்து கொள்ளவும்.

இந்த பவுடரை ஒரு காத்து புகாத டப்பாவில் அடைத்து தனியா எடுத்து வைத்து கொள்ளவும். இப்பொழுத் ஒரு துண்டு இஞ்சியை இடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு டம்ளரில் மோர் எடுத்து கொள்ளவும், இந்த மோருடன் ஒரு ஸ்பூன் அரைத்த ஆளி விதையின் பவுடர் மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த மோரினை தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகு ஒரு 1/2 மணி நேரம் கழித்து வந்த பானத்தை அருந்த வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம்  வரை அருந்துவனினால் உடல் எடை குறையும், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

ஆளி விதை சாப்பிடும் முறை / aali vithai sapidum murai- குறிப்பு:

ஆளி விதை பொடி சாப்பிடுமவர்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். இல்லையெனில் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

கர்ப்பிணி பெண்கள் இந்த ஆளி விதை சாப்பிட கூடாது.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதைய நோயாளிகள் ஆகியவர்கள் அவசியம் இந்த ஆளிவிதை சாப்பிடுவதினால் நல்ல பலன் கிடைக்கும்.

Flax seeds in tamil:-

flax seeds-யின் தமிழ் பெயர் ஆளி விதை.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement