பாகற்காய் சாப்பிடும் போது இந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்!

Don't eat these things while eating Bitter melon

பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுகள்..! Don’t eat these things while eating Bitter melon..!

பாகற்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறியாக இருக்கிறது.. குறிப்பாக இது உடல் நலத்திற்கு மிகவும் உகந்த காய்கறியாக கருத்தப்படுகிறது. காரணம் பல ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த தீர்வினை அளிக்கிறது. இந்த பாகற்காய் சிறந்த காய்கறியாக இருந்தாலும் கூட இதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றன. அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் படித்திரியப்போவது என்னவென்றால் பாகற்காயுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகளை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்னென்ன உணவுகள் என்று இப்பொழுது பார்க்கலாம்.

பாகற்காய் சாப்பிடும் போது இந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்! Food Combinations to Avoid! Bitter melon

பால்:

பாகற்காய் சாப்பிடும் போது, அல்லது பாகற்காய் சாப்பிட பிறகு ஒருபோதும் பால் குடிக்க கூடாது. இது வயிற்று பிரச்சனைகளை உண்டாகுமாம். அதாவது பாகற்காய் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?

முள்ளங்கி:

பாகற்காய் சாப்பிடும் போது முள்ளங்கி அல்லது முள்ளங்கியில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்ளக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஏன் என்றால் முள்ளங்கி மற்றும் பாகற்காயின் தாக்கம் வித்தியாசமானது இருக்கும். இதன் காரணமாக நமது தொண்டையின் அமில தன்மை மற்றும் சளிபோன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே பாகற்காய் சாப்பிடும் போது முள்ளங்கியை தவிர்க்க வேண்டும்.

தயிர்:

உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் பாகற்காய் சாப்பிடும் போது தயிரை உட்கொண்டால் நமக்கு பல வயிறு உபாதைகள் உண்டாகும்.

மாம்பழம்:

கோடைகாலத்தில் அதிகளவு விற்பனை செய்யப்படுவது மாம்பழம் தான். ஆனால் பாகற்காயுடன் மாம்பழம் உட்கொள்வது தீங்குவிளைவிக்கும். இதன் காரணமாக அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாத்திரை சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீர்கள்..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil