கண் நரம்புகள் பலம் பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!

Advertisement

கண் நரம்புகள் பலம் பெற உணவுகள் | Food to Strengthen Eye Nerves 

நமது உடலில் நிறைய உறுப்புகள் இருந்தாலும் கூட கண் மிகவும் முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. ஏனென்றால் கை மற்றும் கால்கள் இல்லாமல் கூட எதோ ஒரு வாழ்க்கையினை வாழ்ந்து விடலாம். ஆனால் கண் இல்லாமல் வாழ்வது என்பது ஒரு சத்தியமற்ற செயல் என்று தான் கூறவேண்டும். இப்படிப்பட்ட கண் பார்வையினை சிறப்பாக வைப்பதும் அல்லது பார்வையிழக்க செய்வதும் கண்ணில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் இத்தகைய கண் நரம்புகள் பலம் பெற்று நம்முடைய கண் பார்வை சிறப்பாக இருக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கண் நரம்புகள் பலம் பெற உணவுகள்

தண்ணீர்:

கண் நரம்புகள் பலம் பெற உணவுகள்

தினமும் நாம் உணவு சாப்பிடுவது நமது உடலுக்கு எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு சரியான அளவில் தண்ணீர் குடிப்பதும் முக்கியம். ஏனென்றல் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம் கண்களுக்கு தேவையான திரவம் கிடைத்து கண் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

கேரட்:

கண் நரம்புகள் பலம் பெற

கேரட்டில் எண்ணற்ற சத்துக்களும் இருந்தாலும் கூட அதில் காணப்படும் வைட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் கண்ணிற்கு மிகவும் அவசியமானதாகும்.

இத்தகைய வைட்டமின் A சத்தானது நமது கண்ணில் ரோடாப்சின் என்ற புரதத்தை சுரக்க செய்த கண் பார்வையினை சிறப்பாக்க உதவுகிறது. அதனால் நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் கேரட் சேர்த்துக்கொள்வது நல்லது.

நுரையீரல் பலமாக இருக்க இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளவும்

மீன்:

how to strengthen eye nerves naturally in tamil

கணிணியை நாம் அதிகநேரம் பயன்படுத்துவதால் நமது கண் வறட்சியுடன் காணப்படும். ஆகாயல் இவற்றை சரி செய்வதற்கு ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்களை நாம் எடுத்துக்கொள்வது நமது கண்ணிற்கும் மற்றும் கண் நரம்பிற்கும் மிகவும் நல்லது.

அதனால் கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன், நெத்திலி மீன், சூரை மீன் மற்றும் சால்மன் மீன் போன்ற மீன்களில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. நீங்கள் மற்ற மீன்களை சாப்பிடும் போதும் இந்த மீன்களையும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உலர் உணவுப்பொருட்கள்:

how to strengthen eye nerves in tamil

நாம் தினமும் சாதாரணமாக சாப்பிடும் உலர் உணவு பொருட்கள் எண்ணற்ற நோய்களுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது. அதில் ஒன்று தான் கண் நரம்பும். உலர்ந்த திராட்சை, முந்திரி, வால்நெட் மற்றும் பாதாம் இதுபோன்ற பொருட்களில் உள்ள வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் கண் நரம்பினை பலம் பெற செய்த பார்வையினை நன்றாகதெரிய வைக்கிறது. 

சக்கரவல்லி கிழங்கு:

சக்கரவல்லி கிழங்கு

சக்கரவல்லி கிழங்களிலும் வைட்டமின் A சத்து நிறைந்து இருக்கிறது. அதனால் நாம் தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை விட சக்கரவல்லி கிழங்கு சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை எடுத்துக்கொண்டால் நம்முடைய கண் நரம்புகள் பலம் பெறும்.

ஆரோக்கியமான கல்லீரலுக்கு நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன..?

கண் நோய்:

உணவு வகைகள்  அளவு 
வைட்டமின் C நிறைந்த உணவு 500 கிராம்
வைட்டமின் E நிறைந்த உணவு 400 கிராம்
ஜிங்க் ஆக்ஸைடு 80 மில்லி கிராம்
காப்பர் ஆக்ஸைடு 2 மில்லி கிராம்
இரும்பு சத்து 2 மில்லி கிராம்

 

மேலே அட்டவணையில் சொல்லப்பட்டுள்ளது போல தினமும் இந்த அளவில் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கண் நோய் எதுவும் வராமல் தடுத்து பாதுகாப்பாக வாழலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement