Foods For Bone Strength in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் எலும்புகள் பலம் பெற என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். எலும்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் பலத்தை கொடுக்கிறது. நமது உடலில் இருக்கும் தசைகள் மற்றும் உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அதை வைத்து தான் அவர்களின் ஆரோக்கியத்தை சொல்ல முடியும். அதனால் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அது எந்த உணவுகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
நரம்புகள் பலம் பெற சாப்பிடவேண்டிய உணவுகள் |
எலும்புகள் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்:
ஒருவரின் எலும்புகள் உறுதியாக இருந்தால் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். எலும்புகள் தான் உடலின் அஸ்திவாரமாக இருக்கிறது. நாம் நடப்பதற்கு, ஓடுவதற்கு, நிற்பது போன்ற அனைத்து செயல்களை செய்வதற்கும் எலும்புகள் தான் உதவுகின்றன. அதனால் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு இதுபோன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
பால்:
கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவுகளில் பால் முதலிடத்தை பிடிக்கிறது. 1 கிளாஸ் பாலில் 300 கிராம் கால்சியம் சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
முட்டைகோஸ்:
முட்டைகோஸில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சுண்ணாம்புச்சத்து அதிக இருப்பதால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் முட்டைகோஸ் நல்ல உணவாக இருக்கிறது.
ப்ரோக்கோலி:
இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த ப்ரோக்கோலி தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் எலும்புகள் வலுப்படும். இதில் இருக்கும் வைட்டமின் K சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் |
பீன்ஸ்:
இதில் கால்சியம், வைட்டமின் A, K, C மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் இது எலும்புகளை உறுதியாக வைக்க உதவுகிறது. இதில் இருக்கும் சத்துக்கள் எழுப்பு வளர்ச்சிக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தினசரி பீன்ஸ் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
கீரைகள்:
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கால்சியம் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. கீரைகள் உடலுக்கு தேவையான 25% கால்சியம் சத்துக்களை தருகிறது. இதில் நார்சத்து, வைட்டமின் A மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் இது எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |