Foods That Dissolve Fat in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் நம் உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் உணவுகள் எது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் பல பேருக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் உடல் எடை அதிகரிப்பும் ஓன்று. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவு முறை தான். இன்றைய காலகட்டத்தில் நாம் கொழுப்பு நிறைந்த துரித உணவுகளை உண்பதால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. அதுபோல நாம் உண்ணும் உணவுகளாலும் நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க முடியும். அந்த உணவுகள் எது என்று பார்க்கலாம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ தொப்பை குறையணுமா? இரவில் இதைச் சாப்பிடுங்க!
கொழுப்புகளை கரைக்கும் எது..?
கத்திரிக்காய்:
கத்திரிக்காயில் கலோரிகள் குறைவாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
வெங்காயம்:
வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் ப்ளே வோனாய்டு அதிகம் இருக்கிறது. அதனால் இது இரத்த குழாய்களில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டுள்ளது. எனவே வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் கரைவதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பூண்டு:
இதில் அல்லிசின்(Allicin) என்ற பொருள் அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதை அன்றாடம் உணவில் கலந்து சாப்பிட்டு வருவதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
இதில் இருக்கும் அல்லிசின் என்ற பொருள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தேவையற்ற கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் !!! |
வெண்டைக்காய்:
வெண்டைக்காயில் கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்புகள் அதிகம் இருப்பதால், இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதில் அதிகளவு நார்ச்சத்தும், குறைந்த அளவு கலோரிகளும் இருப்பதால் இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
பீன்ஸ்:
இதில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், இதை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். பீன்ஸில் கொழுப்புகளை கரைக்கும் பண்புகள் அதிகம் இருப்பதால் இதை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க முடியும்.
உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இதை TRY பண்ணுங்க..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |