முட்டையுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்..! ஏன் தெரியுமா சாப்பிடக்கூடாது…!

முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள்

பொதுவாக நாம் சாப்பிடும் உணவானது நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியதாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அப்படி நாம் சாப்பிடும் உணவு அனைத்தும் முழு நன்மையினை அளிப்பது இல்லை. ஆகையால் எந்த உணவினையும் நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதுமட்டும் இல்லாமல் தினமும் 1 முட்டையினை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நம்முடைய உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கும் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. என்ன தான் முட்டை நிறைய வகையான சத்துக்களை அளித்தாலும் கூட முட்டை சாப்பிடும் போது நாம் சில உணவுகளை மறந்தும் கூட சேர்த்து சாப்பிடக்கூடாது. எனவே அப்படி நாம் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

முட்டையில் உள்ள சத்துக்கள்:

 வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் B12, வைட்டமின் D, வைட்டமின் E, வைட்டமின் K, மெக்னீசியம், பொட்டாசியம், ஜிங்க், புரோட்டீன், சல்பர் மற்றும் சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. 

முட்டை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு.. 

Foods That Should Not be Eaten With Eggs: 

சர்க்கரை:

சர்க்கரை

நாம் முட்டை சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சர்க்கரையினை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் முட்டையில் அமினோ அமிலம் உள்ளது. அதே போல சர்கரையிலும் அமினோ அமிலம் உள்ளது. ஆகையால் இந்த இரண்டினையும் நாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது நம்முடைய உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து இதன் விளைவாக இரத்தத்தில் கட்டிகள் வரச் செய்கிறது.

டீ, காபி: 

டீ, காபி

முட்டையுடன் சேர்த்து டீ மற்றும் காபி குடிக்கும் போது நம்முடைய உடலில் மலச்சிக்கல் பிரச்சனையினை வரச் செய்கிறது. அதுமட்டும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவானது செரிமானம் ஆகாமல் இருக்க செய்து செரிமான பிரச்சனையும் வருகிறது.

அசைவம் சாப்பிடக்கூடாது:

அசைவம் சாப்பிடக்கூடாது

வீட்டில் அசைவ சாப்பாடு என்றாலே அதில் கட்டாயமாக முட்டை தான் முதலில் இருக்கும். இவ்வாறு நாம் அசைவ சாப்பாட்டுடன் சேர்த்து முட்டை சாப்பிடும் போது இந்த இரண்டிலும் உள்ள புரதச் சத்தானது எளிதில் சாப்பாட்டினை செரிமானம் அடையச் செய்யாமலும் மற்றும் உடலை சுறுசுறுப்பாகவும் இயங்க விடாமல் செய்து விடுகிறது. ஆகையால் அசைவ உணவு சாப்பிடும் போது முட்டை சாப்பிடுவதை தவிர்த்துகொள்ள வேண்டும்.

சோயா பால்:

சோயா பால்

 

சோயா பாலில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் என்ற கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. ஆகையால் முட்டையுடன் சேர்த்து இந்த சோயா பாலினை குடிக்கும் போது நம்முடைய உடலில் உள்ள புரதச்சத்தினை உறிஞ்சுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

வாழைப்பழம் சாப்பிடலாமா:

வாழைப்பழம் சாப்பிடலாமா

 

அதே போல் முட்டை மற்றும் வாழைப்பழத்தினை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டினையும் நாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படும் வாய்ப்பினை கொண்டுள்ளது.

பச்சை முட்டை குடிப்பது நல்லதா… கெட்டதா…

யாரெல்லாம் முட்டை சாப்பிடலாம்:

பொதுவாக முட்டை என்பது பெரும்பாலும் அனைவரும் எடுத்துகொள்ள கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் மஞ்சள் கருவில் 2.8 கிராம் ப்ரோட்டின் சத்தும் மற்றும் வெள்ளை கருவில் 3.5 கிராம் புரோட்டீனும் இருப்பதால் ஒவ்வொவருவரும் அவர் அவருடைய உடல் நிலைக்கு ஏற்ற மாதிரி தான் சாப்பிட வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil