அசைவத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் | Foods That Should Not Be Included in a Non-Vegetarian Diet in Tamil
இன்றைய பதிவில் அசைவத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகளை பற்றி காண்போம். அசைவம் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. அசைவ விரும்பி சாப்பிடும் போது சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் இந்த மாதிரி நீங்கள் சாப்பிடும் பொழுது உங்கள் உடலுக்கு தீங்கினை விளைவிக்கும். சைவ உணவுகளை சாப்பிடும் பொழுது கீழ் கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடாதீர்கள்.
இதையும் படியுங்கள் ⇒ குழந்தைக்கு அசைவ உணவு எப்போது கொடுக்க வேண்டும்..!
முள்ளங்கி:
அசைவ உணவு சாப்பிடும் போது வேக வைத்த முள்ளங்கியை சேர்த்து சாப்பிட கூடாது. ஏனென்றால் முள்ளங்கி மற்றும் அசைவத்தில் புரத சத்துக்கள் அதிகமாக இருக்கும். இரண்டிலும் உள்ள புரத சத்துக்கள் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை உடையதாக மாறிவிடும்.
கிழங்கு தீமைகள்:
இயல்பாகவே மண்ணிற்கு அடியில் விளையும் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். கிழங்கு வகைகள், இறைச்சியில் சாப்பிடும் போது செரிமானம் ஆகுவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். அதுமட்டுமில்லாமல் வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
மைதா மாவு தீமைகள்:
மைதா மாவு சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் அசைவம் சாப்பிடும் போது மைதா மாவு சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
தயிர் தீமைகள்:
பொதுவாக நிறைய நபர்கள் சைவம் மற்றும் அசைவம் உணவுகள் சாப்பிட்டு கடைசியாக தயிர்போட்டு சாப்பிடுவார்கள். சைவம் உணவுகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடும் போது தயிர் எடுத்து கொள்ள கூடாது. தயிர் மட்டுமில்லை பாலுடன் சேர்ந்த எந்த உணவு பொருட்களையும் அசைவம் சாப்பிடும் போது சேர்த்து சாப்பிட கூடாது.
ஐஸ்கிரீம்:
சுப நிகழ்ச்சிகளில் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம் கொடுப்பார்கள். அசைவ உணவுகளில் ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
கீரை:
இறைச்சி உணவுகளில் கீரை சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் செரிமான பிரச்சனை மற்றும் கல்லீரலில் பிரச்சனை ஏற்படும்.
பயறு வகைகள்:
அசைவ உணவுகளில் பயறு சம்மந்தப்பட்ட எந்த உணவை சாப்பிட்டாலும் மூட்டுவலி பிரச்சனை வர கூடும். அதுமட்டுமில்லாமல் உடல் சுறுசுறுப்பை இழக்க செய்யும்.
மேல் கூறப்பட்டுள்ள உணவுகளை அசைவ உணவுகளில் சேர்த்து சாப்பிடாதீர்க்ள. உடலுக்கு தீங்கினை விளைவிக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |