சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள் என்ன..?

Advertisement

சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள்..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நண்பர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சிசேரியன் என்பது அறுவை சிகிச்சை முறையில் குழந்தையை பெற்றெடுக்கும் முறையாகும். இன்றைய காலகட்டத்தில் பல பெண்களுக்கு சிசேரியன் தான் நடைபெறுகிறது.

பல பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். சுகப்பிரசவம் என்பது ஒரு வரம். ஆனால் அது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதுபோல சிசேரியன் செய்த பெண்கள் பிரசவத்திற்கு பிறகு சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுகள்

சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பெண்கள் கர்ப்ப காலங்களில் தங்களையும் தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையை கவனமாக பார்த்து கொள்வார்கள். ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சத்தான உணவுகளை உண்ணவேண்டும் என்பதில் கவனமுடன் இருப்பார்கள். கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவது நல்லது தான்.

அதிலும் சுகப்பிரசவம் இல்லாமல் சிசேரியன் செய்துகொண்டவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சிசேரியன் செய்த பெண்கள் பிரசவத்திற்கு பின்னும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அதுபோல சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை என்ன உணவுகள் என்பதை பற்றி பார்ப்போம்.

காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்:

சிசேரியன் செய்த பெண்கள் காரம் நிறைந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட கூடாது. காரணம் சிசேரியன் செய்த இடத்தில் உள்ள புண் ஆறுவதற்கு சில மாதங்கள் ஆகும். 1 வருடம் கூட ஆகலாம்.அப்படி இருக்கும் போது நீங்கள் காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் அந்த இடத்தில் இருக்கும் புண் ஆறாமல் போய்விடும். அதனால் சில பாதிப்புகள் ஏற்படும்.

மேலும், இது இரைப்பையில் பிரச்சனையை உண்டாக்கும். எனவே சிசேரியன் செய்த பெண்கள் காரம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் காரம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் போது அவை தாய்ப்பாலில் சேர்ந்து குழந்தைக்கு காரத்தன்மையை உண்டாக்கும்.

குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்:

சிசேரியன் செய்த பெண்கள் குளிர்ச்சி நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் குடிக்க கூடாது. அதுபோல குளிர்ச்சி நிறைந்த உணவுகளை உண்ண கூடாது. காரணம் குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவதால் அவர்களுக்கு சளி பிடிக்ககூடும். அது குழந்தைக்கு பரவும் வாய்ப்புள்ளது. அதனால் குளிச்சி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதுபோல சூடான உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.

சிசேரியன் செய்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்:

எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், தின்பண்டங்கள் வறுவல் போன்ற எண்ணெயில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் செய்த உணவுகளை சாப்பிடும் போது அது குழந்தைக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement