வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாம்பழம் சாப்பிடும் போது தப்பி தவறிக்கூட இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!

Updated On: May 8, 2023 7:14 AM
Follow Us:
Foods To Avoid While Eating Mango in Tamil
---Advertisement---
Advertisement

Foods To Avoid While Eating Mango in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவில் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவலை தான் கூறப்போகிறேன். அது என்ன தகவல் என்று மேல் படித்து தெரிந்திருப்பீர்கள். இருந்தாலும் மறுமுறையும் நியாபகப்படுத்தி கூறுகிறேன். பொதுவாக மாம்பழம் என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. மாம்பழத்தை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். மாம்பழத்தில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. இருந்தாலும் நாம் மாம்பழம் சாப்பிடும் போது ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அது என்ன உணவுகள் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சீரகத்தை சமையலுக்கு சேர்க்கும் முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள் 

மாம்பழம் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

மாம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் C, A, பெக்டின், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் இருக்கிறது. ஆனால் இந்த மாம்பழத்தை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடாது என்று கூறப்படுகிறது. அந்த உணவுகள் எது என்று கீழ் காணலாம்.

தண்ணீர்: 

மாம்பழம் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொதுவாக மாம்பழம் சாப்பிடும் போது, உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மாம்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி மற்றும் வயிற்று வலி ஏற்படும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு குறைந்தது (1/2) அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க.. மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா

தயிர்: 

மாம்பழம் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

பெரும்பாலும் நம்மில் பலரும் தயிர் சாதத்துடன் மாம்பழம் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. காரணம், மாம்பழம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. எனவே நீங்கள் மாம்பழத்திற்குப் பிறகு தயிர் சாப்பிடும் போது, ​​அது உங்கள் வயிற்றில் சூடான மற்றும் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்துகிறது. இது நச்சுகளின் உருவாக்கம் என்பதால் தோல் பிரச்சினைகள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பாகற்காய்: 

மாம்பழம் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

நாம் மதிய உணவில் பாகற்காய் கூட்டோ பொரியலோ சாப்பிட்டு விட்டு மாம்பழம் சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. காரணம் மாம்பழம் சாப்பிட்ட உடனேயே பாகற்காய் சாப்பிடுவது வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். மேலும்  சில சந்தர்ப்பங்களில் சிலருக்கு இது மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

👉 டீயுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்..  உங்களுக்கு தெரியுமா.. 

காரமான உணவுகள்: 

மாம்பழம் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

பெரும்பாலும் நம்மில் பலரும் காரமான உணவுகளுக்கு சைட் டிஷ் மாம்பழம் வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இப்படி சாப்பிடுவது ஆபத்தான ஓன்று. காரணம் நாம் காரமான உணவுகளுடன் மாம்பழம் சாப்பிட்டால் அது தோல் நோய்களை ஏற்படுத்தும்.

குளிர்பானங்கள்:

மாம்பழம் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

மாம்பழம் சாப்பிடும் போது குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம் குளிர்பானங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கும். அதேபோல் மாம்பழத்திலும் சர்க்கரை இருக்கிறது. அதனால் நாம் மாம்பழம் சாப்பிட்ட உடன் குளிர்பானங்கள் குடிப்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க  செய்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now