இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும்..!

Advertisement

Foods You Should Never Reheat in Tamil

வணக்கம் அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களே… இன்றைய ஆரோக்கியம் பதிவில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் எத்தனையோ மின்னணு சாதனங்கள் வந்து விட்டன.

இன்றைய நிலையில் நாம் சமைத்த உணவுகளை பதப்படுத்தி சாப்பிடுகிறோம். சொல்ல போனால், நாம் சமைக்கும் உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து தான் சாப்பிடுகிறோம். நாம் இதுபோல உணவுகளை பதப்படுத்தி சாப்பிடுவதால் நமது உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதேபோல நாம் சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதால் அது விஷமாக மாறுகிறது. அந்த வகையில் இன்று இந்த இந்த பதிவின் மூலம் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க…

மீண்டும் சூடுபடுத்த கூடாத உணவுகள் என்ன..? 

வீட்டில் இருக்கும் பெண்கள் மீதமான உணவுகளை பிரிட்ஜில் வைத்து அதை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். நாம் அனைவருமே சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.

சாதம்: 

சாதம்

நாம் உண்ணும் உணவுகளில் மிகவும் முக்கியமான உணவு தான் சாதம். நாம் வடித்த சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. சாதத்தை சூடுபடுத்துவதால் அதில் நச்சுத்தன்மை அதிகரித்து அது விஷமாக மாறுகிறது. இதனால் குடல் சம்மந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுகிறது.

முட்டை:

முட்டை

முட்டையில் அதிகளவு புரோட்டின் சத்து நிறைந்துள்ளது. இருந்தாலும் முட்டையை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்துவதால் அது விஷமாக மாறுகிறது. இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு

நாம் சமைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடுபடுத்துவதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விடுகின்றன. இதனால் உருளைக்கிழங்கில் நச்சுத்தன்மை அதிகரித்து விடுகிறது. இதன் காரணமாக வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நல பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

கீரை: 

கீரை

கீரையில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. நாம் கீரையை சூடுபடுத்தும் போது நைட்ரேட்ஸ் சத்துக்கள் நைட்ரைட்டாக மாறுகின்றன. இதனால் குடல் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் கீரையை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சிக்கன்: 

சிக்கன்

பொதுவாக கோழி இறைச்சி அதிகம் சாப்பிட கூடாது என்று கூறுவார்கள். கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் மற்றும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால் செரிமானம் ஆக அதிக நேரம் தேவைப்படும். அதேபோல சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதால் அதில் உள்ள புரதச்சத்து அதிகரித்து விஷமாக மாறுகிறது. அதனால் சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட்:

பீட்ரூட்

பீட்ரூட்டையும் சூடுபடுத்தி சாப்பிட கூடாது. கீரை வகைகளைப் போலவே பீட்ரூட்டிலும் அதிகளவு நைட்ரேட்கள் உள்ளன. அதனால் பீட்ரூட்டை சூடுபடுத்தும் போது அது விஷமாக மாறுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement