வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க..! உடலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்..!

Updated On: February 21, 2025 1:29 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Fruit Combinations That Can Be Dangerous in Tamil

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. பழங்களில் நிறைய வைட்டமின்கள் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் குழந்தைகள் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து துரைத்த உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அடு குழந்தைகள் உடலுக்கு நல்லது அல்ல. குழந்தைகளுக்கு பழங்களை கொடுத்து அவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பொதுவாகவே நாம் பழங்கள் சாப்பிடும் போது ஒரு நாளைக்கு இரண்டு பழங்களை எடுத்துக்கொள்வோம். அப்படி எடுத்துக்கொள்ளும்போது சில பழங்களை சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே, இந்த பதிவில் எந்தெந்த பழங்களை சேர்த்து சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

27 நட்சத்திர பழங்கள்

எந்தெந்த பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது:

ஆரஞ்சு மற்றும் கேரட்:

கேரட் மற்றும் ஆரஞ்சு சேர்த்து சாப்பிடும் போது உடலுக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள்  உண்டாகும். இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் உண்டாகும்.

பப்பாளி மற்றும் எலுமிச்சை:

பப்பாளி மாற்று எலுமிச்சையை ஒருபோதும் சேர்த்து சாப்பிட கூடாது. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் சமச்சீரின்மை போன்றவை உண்டாகின்றன. இது குழந்தைகள் உடல்நிலைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

ஆரஞ்சு மற்றும் பால்:

பால் மற்றும் ஆரஞ்சு பழத்தை ஒன்றாக சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படும். ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலம் , உணவின் செரிமானத்திற்கு பொறுப்பாக இருக்கும் ஸ்டார்ச்சை முற்றிலும் அழித்து விடுகிறது. எனவே, பால் கலந்த உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்ப்பதால் உடலுக்கு அஜீரணக்கோளாறு ஏற்படும்.

கொய்யா மற்றும் வாழைப்பழம்:

கொய்யா மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவதால் அமில நோய் , குமட்டல், வாய்வு பிரச்சனை மற்றும் தலைவலி போன்றவை உண்டாகின்றன.

காய்கறிகள் மற்றும் பழங்கள்:

காய்கறி மற்றும் பழத்தை ஒருபோதும் சேர்த்து சாப்பிடக்கூடாது. பழங்களில் சர்க்கரை அளவ அதிகம் இருப்பதால், செரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். இவை அதிக நேரம் வயிற்றில் இருப்பதால், வயிற்றில் இவை புளித்துப் போவதால் நச்சுகளை வெளியிடுகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, தலைவலி, தொற்று பாதிப்பு, மற்றும் வயிற்று வலி போன்றவை உண்டாகின்றன.

அன்னாசிப்பழம் மற்றும் பால்:

அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமின் (Bromine) என்னும் கூறு பாலுடன் சேர்வதால் தொடர்ச்சியான பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. வாய்வு, குமட்டல், தொற்று பாதிப்பு , தலைவலி, வயிற்றுவலி போன்றவை ஏற்படும் என்பதால் இந்த இணைப்பை தவிர்ப்பது நல்லது.

வாழைப்பழம் மற்றும் புட்டிங்:

வாழைப்பழத்துடன் புட்டிங் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் கடினமாகி, நச்சு உற்பத்தியை உடலில் ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உண்டாகிறது.

பழங்கள் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now