தொண்டை புண் குணமடைய பழம்
தொண்டை புண் வந்து விட்டாலே எச்சை விழுங்குவதில் முதல் உணவு சாப்பிடுவது வரை எல்லாவற்றிற்கும் பிரச்சனையாக இருக்கும். குரல் வளையத்தை சுற்றி வலி, வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சனை ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட புண்ணை சரி செய்வதற்கு சில பழங்களை சாப்பிட்டால் சரியாகிவிடும். அவை என்னென்ன பழங்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
மாதுளைப்பழம்:
மாதுளை பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் தொண்டை புண்ணை குறைக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இவற்றில் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி, புரதசத்து போன்றவற்றை நிறைந்துள்ளது. அதனால் இந்த பழத்தை தினமும் 1 சாப்பிட வேண்டும். இவை தொண்டை புண் மட்டுமில்லை வயிற்று புண் வரைக்கும் சரி செய்ய கூடியது. முக்கியமாக இதில் சீனி சேர்க்காமல் குடிப்பது நல்லது.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்றவை நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதன் மூலம் தொண்டை வலியை குறைக்க செய்கிறது. சாப்பிடுவதற்கும் ஈசியாக இருக்கும்.
முலாம்பழம்:
முலாம் பழமானது தொண்டை புண் இருக்கும் போது சாப்பிடுவதற்கு ஈசியாக இருக்கும். தொண்டை புண்ணையும் ஆற்றக்கூடியது. இந்த பழமானது குளிர்ச்சி தன்மை உடையது.
ஆப்பிள் பழமும் தொண்டை புண் இருக்கும் காலத்தில் சாப்பிடலாம். எளிது ஜீரணிக்க கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.
அன்னாசி:
அன்னாசி பழமானது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை குறைப்பதற்கு உதவுகிறது. அலர்ஜி பிரச்சனையினால் தொண்டை புண் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்வதற்கு அன்னாசி பழம் உதவுகிறது.
தொண்டை புண் இருக்கும் போது தவிர்க்க வேண்டியு பழங்கள்:
சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சிட்ரஸ் நிறைந்த பழங்களை எடுத்து கொள்ளும் போது எரிச்சலை ஏற்படுத்த கூடும். வலி மற்றும் புண் ஆனது ஆறாது. அதனால் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழத்தை தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |