வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள்..!

உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் | Fruits for Weight Loss in Tamil

ஹாய் பிரண்ட்ஸ்.. வணக்கம் உடல் எடையை குறைக்க அதிகம் டயட் எடுக்கும் நபரை நீங்கள்.. எவ்வளவு தான் டயட்டில் இருந்தாலும் உடல் எடை குறையமாட்டேங்குதா..? இனி கவலை வேண்டாம். ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள் நமது உடலை கச்சிதமாக வைத்து கொள்வதற்கு ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகளை நாம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால் நீங்கள் பழம் வகைகளை அதிகளவு எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது. குறிப்பாக இந்த பழம்  வகைகளில் உடல் எடையை குறைக்க உதவும்பழங்களும் இருக்கின்றன. ஆகவே ஆரோக்கியமான முறையில் நாம் நமது உடல் எடையை குறைக்க சில பழம் வகைகளை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

உடல் எடையை குறைக்கும் பழங்கள் – Fruits for Weight Loss in Tamil:

கிரேப் புரூட் (Grapefruit):

Grapefruit

Fruits for Weight Loss in Tamil – இந்த கிரேப் புரூட் பார்ப்பதற்கு ஆராஜ் பழம் போல் இருக்கும். உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் என்று சொல்லலாம். இந்த பழத்தில் வெறும் 40 சதவீதம் கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளது. மேலும் நாம் தினமும் உட்கொள்ள வேண்டிய வைட்டமின் சி தேவையில், 65 சதவீதத்தை கிரேப் புரூட் வழங்குகிறது. இந்த பழத்தில் கிளைசெமிக் அமிலம் குறைவாகவே உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் கலக்கும் விதமான தரமான இயற்கை சர்க்கரையை வழங்கக் கூடியது. உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கக்கூடியது. கிரேப் புருட்டில் கிளைசெமிக் குறியீட்டு அளவு குறைவாகவே இருப்பதால் ஆரோக்கியமான உங்களது உடல் எடையை பராமரிப்பதற்கு உதவும்.

அவகேடா:

Avocado

உடல் எடையை குறைப்பதற்கு அவகேடா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெண்ணெய் பழங்களில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. வெண்ணெய் பழம்பெருமை எடை இழப்புக்கு உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பசியை குறைக்கவும் கொழுப்பை எதிர்த்து போராடவும் உதவுகிறது.

தர்பூசணி:

தர்பூசணி

Fruits for Weight Loss in Tamil – தர்பூசணியில் அதிகளவு தண்ணீர் சத்து உள்ளது. ஒரு சிறிய பெளல் தர்பூசணி சாப்பிட்டால் கூட வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதில் குறைந்த கலோரி இருப்பதால் எடையை குறைக்க உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. ஆனால் கிளைசெமிக் அளவு அதிகமாக இருப்பதால் தர்பூசணி எடுத்துக் கொள்ளும் நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு எடுப்பது நல்லது.

​மாதுளை பழம்:

​மாதுளை பழம்

நீங்கள் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் பூஸ்டை தேடிக் கொண்டு இருந்தால் அதற்கு மாதுளை பழம் உதவியாக இருக்கும். மாதுளை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கொழுப்பை விரட்டவும் உதவுகிறது. மாதுளை விதைகள் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது உங்க உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். தினசரி ஓட்மீல், சாலட் அல்லது தயிரில் ஒரு சில மாதுளை விதைகளை சேர்ப்பது உங்க எடையை நிர்வகிக்க உதவி செய்யும்.

​கிவி பழம்:

Fruits for Weight Loss in Tamil – உடல் எடையை குறைக்க உதவுத்தத்தில் கிவி பழத்திற்கு சிறந்த பங்கு இருக்கிறது. ஒவ்வொரு கிவி பழத்திலும் அதிக அளவு நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் உள்ளது. வாரத்தில் குறைந்தது இரண்டு பழங்களை சாப்பிடுவது தொப்பை கொழுப்பை எரிக்கவும், உங்கள் இடுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. கிவி பழத்தை சாப்பிட்டு வந்தால் மேம்பட்ட கொழுப்பு, மேம்பட்ட குடல் ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை ஏற்படும். இதய நோய் உருவாகும் அபாயத்தில் உள்ளவர்கள் தங்கள் உணவுகளில் கிவி பழத்தை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெந்நீர் இப்படி குடித்தால் 10 கிலோ உடல் எடை குறையும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Natural health tips in tamil