Fruits To Cleanse The Kidney Toxins In Tamil
நம் உடலில் இருக்கும் பகுதிகளிலேயே சிறுநீரகம் தான் முக்கியமான பாதியாகும் ஏனென்றால் சிறுநீரகம் நம் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்யும் வடிகட்டியாக செயல்படுகிறது. நச்சுக்களை சுத்தப்படுத்தி கழிவுகளை சிறுநீர் மூலம் வெளிப்படுத்துகிறது. நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறினால் தான் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கழிவுகள் வெளியேறவில்லை என்றால் நம் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும். எனவே சிறுநீரகத்தை சுத்தம் செய்து, நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் சாப்பிடவேண்டிய ஐந்து முக்கியமான பழங்களை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கபோகிறோம்.
Is Eating Chicken Feet Good or Bad in Tamil
சிறுநீரக நச்சுக்கள் என்றால் என்ன?
உடலில் இருக்கும் கழிவுகளை வடிகட்டுவது உடலில் இருக்கும் கிட்னிகளின் வேலையாகும். உடலில் ஏற்படும் காயங்கள், உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சனைகள் காரணமாக கிட்னிகள் பாதிப்படையும். அப்பொழுது, அவற்றால் உடலில் இருந்து கழிவுகளை வடிகட்ட முடியாது. இது உடலில் நச்சு தன்மையை உருவாக்க வழிவகுக்கிறது. இதை தான் சிறுநீரக நச்சுக்கள் என்று கூறுவார்கள்.
சிறுநீரக நச்சுக்களை சுத்தம் செய்யும் ஐந்து பழங்கள்:
சிவப்பு திராட்சை:
சிறுநீரக நச்சுத்தன்மைக்கு சிவப்பு திராட்சை மிகவும் பயனுள்ள பழமாக கருதப்படுகிறது. சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கும் ஃபிளாவனாய்டுகள் (Flavonoids) இதில் உள்ளன. அதுமட்டுமில்லாமல் சிவப்பு திராட்சையில் பல்வேறு வகையான ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. அவை சிறுநீரகங்களை உள்ளே இருந்து சுத்தப்படுத்துகின்றன. மேலும், சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன.
பெர்ரி அல்லது ஸ்ட்ராவ்பெர்ரி:
பெர்ரிகளில் ஸ்ட்ராபெரி, குருதிநெல்லி, புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஜாமூன் போன்ற பெர்ரி வகைகள் இருக்கின்றன. இந்த பழங்களில் நிறைய ஆன்டிஆக்ஸிடண்ட்களும் பைட்டோ கெமிக்கல்களும் நிறைந்திருக்கின்றன. இந்த பழங்கள் சிறுநீரக செல்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியின் அபாயத்தை குறைக்கிறது.
தர்பூசணி:
தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் நீர்சத்து நிறைந்துள்ளது. மேலும் தர்பூசணி சிறுநீரக பாதுப்புகளின் அபாயத்தை குறைகிறது. தர்பூசணியில் உள்ள லைகோபீன் கலவை சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தர்பூசணி சிறுநீரகத்தில் பாஸ்பேட்(phosphate), ஆக்சலேட்(oxalate), சிட்ரேட் அமிலம் (citric acid) மற்றும் கால்சியம்(calcium) ஆகியவற்றை சமன் செய்கிறது.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை:
சிறுநீரகத்தை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை சாறு மற்றும் ஆரஞ்சு பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பழச்சாறு சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. இதனுடன், உடல் முழுவதும் திரவங்களை சமநிலைப்படுத்துகிறது.
மாதுளை:
மாதுளை பழம் சிறுநீரக பாதிப்பு அபாயங்களை குறைகிறது. மாதுளை பழம் சிறுநீரகத்தில் பாஸ்பேட்(phosphate), ஆக்சலேட்(oxalate), சிட்ரேட் அமிலம் (citric acid) மற்றும் கால்சியம்(calcium) ஆகியவற்றை சமன் செய்கிறது. சிறுநீரக நச்சுக்களை நீக்குவதில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
Ghee With Hot Water In The Morning Benefits In Tamil
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |