பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் உண்டாவதற்கான காரணங்கள்

Advertisement

பித்தப்பை கல் வர காரணம்

Gallbladder Stone Reason in Tamil – இப்போது உள்ள இளம் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன. இந்த பித்தப்பை கற்கள் வருவதற்கு என்ன முக்கிய காரணம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். நாம் ஒரு பிரச்சனை வருவதற்க்கான காரணத்தை தெரிந்துகொண்டோம் என்றால் பின் அந்த பிரச்சனையை எளிதாக குணமாக்கிட முடியும். சரி வாங்க பித்தப்பையில் கல் வர என்ன காரணம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

Gallbladder Stone Reason in Tamil:

சரியாக உணவு அருந்தாமல் பட்டினியாக இருப்பது. அடிக்கடி வயிற்றுக்கும் சரியாக உணவருந்தாமல் பட்டினியாக இருந்தாலும் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு காரணமாக அமையும்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாகும்.

கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்வதினால் செக்ஸ் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்டு பித்தப்பையில் கற்கள் உருவாக்க வழிவகுக்கும்.

இரத்த சோகை பிரச்சனை உள்ள பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாகும்.

சிறுகுடல் பாதியில் ஏற்படும் வியாதிகள் காரணமாக பித்தப்பை கற்கள் ஏற்படலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்..!

அறிகுறிகள்:

மார்பு எலுமிற்கும், தொப்புளுக்கு இடையில் வலி ஏற்படலாம்.

முதுகு மற்றும் தோள்பட்டையில் கடுக்கும்.

வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனை இருக்கும்.

சிலருக்கு எந்த ஒரு வலியும் இருக்காது இருப்பினும் அதற்கான பாதிப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கும்.

பித்தப்பை கற்களை தவிர்ப்பது எப்படி?

கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

வேளாவேளைக்கு சரியான நிறத்திற்கு உணவருத்த வேண்டும்.

பட்னி, விரதம் போன்று இருப்பதாய் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் நார்ச்சத்து உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பித்தப்பை கற்களை முற்றிலும் தவிர்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பித்தப்பை கல் அறிகுறி

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement