Gastric Problem Home Remedy in Tamil | வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்
வாயு தொல்லை: நெஞ்சு எரிச்சல்… ஏதோ குத்துவது போன்ற உணர்வு… ஆசன வாயில் அடிக்கடி வாயு வெளியேறுவது… மாரடைத்தது போன்ற உணர்வு. எதையாவது சாப்பிட்டால் அப்படியே எரிச்சல் உண்டாகுவது. வயிற்றில் கட கடவென சத்தம் வருவது, லேசாக தலை சுற்றுவது சிலருக்கு இருக்கலாம். இப்படி பல அறிகுறிகளும் அசௌகரியமும் தாய்மார்களுக்கோ, கர்ப்பிணிகளுக்கோ, வீட்டு பெரியவர்களுக்கோ இருக்கும். இந்த வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் (Gastric Problem Home Remedy) என்ன உள்ளது என்பதை பற்றி இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!
சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! |
வாயு தொல்லை நீங்க என்ன செய்வது?
வாயு தொல்லை சரியாக வீட்டு மருத்துவம்:
பப்பாளி:
இந்த வாயு தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளி பழத்தை ஒரு துண்டை எடுத்து சாப்பிடுங்கள். இது வாயு தொல்லை சரிசெய்துவிடும்.
ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தொல்லையும் குணமாகிவிடும்.(கர்ப்பிணிகள் இந்த பப்பாளி பழ மருத்துவத்தை எடுத்துக்க கூடாது.)
மசாலா பொருட்கள்:
இந்த Gastric Problem Home Remedy சீரகம், ஏலக்காய், சோம்பு மூன்றும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
எனவே வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
சீமை சாமந்தி டீ:
சீமை சாமந்தி டீ பேக் இப்போது எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். அதனை வாங்கி தண்ணீரில் தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்
வாழைப்பழம்:
இந்த வாய்வு தொல்லைக்கு வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.
தேங்காய்:
இந்த வாயு தொல்லை நிரந்தரமாக நீங்க தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
பேரிக்காய்:
ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.
புதினா இலைகள்:
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
மிளகு சூரணம்:
மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..! |
வாயு தொல்லை நீங்க யோகா – வாயு முத்திரை:-
வாய்வு தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இந்த முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது என்று சொல்லலாம்.
பயன்கள்:
மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும். வாய்வு தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |