நெய்யை உணவில் சேர்த்து கொள்பவரா நீங்கள்.! அப்போ உடலிற்கு நல்லதா.! கெட்டதா.!

Advertisement

Ghee Benefits

நெய்யை பெரும்பாலனவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். பலரும் உணவு செய்யும் போது அதில் நெய் சேர்த்து சமைப்பார்கள். இன்னும் சிலருக்கு சாப்பிடும் போது நெய் போட்டு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சிலருக்கு தான் நெய்யை பிடிக்காது. பலருக்கும் நெய் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த நெய்யில் பல நன்மைகள் இருக்கிறது. அதே போல அதில் தீமைகளும் இருக்கிறது. அதனால் நெய்யில் உள்ள சத்துக்கள், நன்மைகள், யாரெல்லாம் சாப்பிட கூடாது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நெய்யில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் டி, ஏ, கே  போன்ற சத்துக்கள் உள்ளது.

1 தேக்கரண்டி நெய்யில் உள்ள சத்துக்கள்:

கலோரிகள் 130, கொழுப்பு 15 கிராம் உள்ளது.

நெய்யில் உள்ள நன்மைகள்:

இதய பிரச்சனை வராமலிருக்க:

இதய பிரச்சனை

நெய்யில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ராலை தருகிறது. மேலும் இதய பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்கும்.

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

நெய் செரிமானத்திற்கு உதவுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் உணவுக்கு முன் நெய்யை சாப்பிட்டார்கள். மேலும் நெய் குடலில் புண் வராமலும் புற்றுநோய் வராமலும் பாதுகாத்து கொள்ளும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

நெய்யில் பியூட்ரிக் அமிலம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்..!

சருமத்திற்கு உகந்தது:

நெய்யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் சருமத்தை ஈர பதமாக்குகிறது. மேலும் சருமத்தை மென்மையாக வைத்து கொள்ள உதவுகிறது.

எலும்பு பிரச்சனை:

எலும்பு பலம் பெற

நெய்யில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய:

நெய் உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தால் நெய்யை உணவில் சேர்த்து கொள்ளவும்.

நெய் யாரெல்லாம் சாப்பிட கூடாது:

பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் என்பவர்கள்  நெய்யை தவிர்க்க வேண்டும்.

இதய நோயாளிகள் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்.

உடல் பருமன் உள்ளவர்களும் நெய்யை சாப்பிட கூடாது.

கர்ப்பிணிகளுக்கு செரிமான பிரச்சனை இருந்தால் நெய்யை சாப்பிட கூடாது.

ஒரு நாளைக்கு எவ்வளவு நெய் சாப்பிட வேண்டும்:

தினமும் உங்களின் உணவில் நெய்யை சேர்த்து கொள்வது அவசியமானது. அதில் தினமும் 3 முதல் 6 தேக்கரண்டி நெய்யை எடுத்து கொள்ள வேண்டும்.

தினமும் நெய் சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ அதிலுள்ள தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement