Ghee With Hot Water In The Morning Benefits In Tamil
காலை எழுந்ததும் அனைவருக்கும் சூடாக காபி அல்லது டீ குடித்தால் தான் அன்றைய நாள் ஆரம்பமாகும். உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பவர்கள் சுடுதண்ணீர் குடிப்பார்கள். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடல் செரிமானத்திற்கு நல்லது. இதுவே வெதுவெதுப்பான நீரில் நெய் சேர்த்து குடித்தால் உடல் செரிமானத்திற்கு கூடுதல் நன்மைகளை தருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆமாங்க காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. என்ன என்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
நெய்யில் வைட்டமின் ஏ, ஈ, டி மற்றும் கே போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது.
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

சருமம் மற்றும் தலைமுடிக்கு உதவுகிறது:
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சரும பொலிவு மற்றும் தலைமுடிக்கு நன்மை விளைகிறது. நெய்யில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை பளபளப்பாக மற்றும். மேலும் இது முடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளர் பயன்படுகிறது. மேலும் இது சரும பிரச்சனைகளை தடுக்கிறது.
செரிமான பிரச்சனைக்கு உதவுகிறது:
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் அலர்ஜி குறைந்து செரிமான ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது வாயு, மலசிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை நீக்கும். இது குடலை சுத்தப்படுத்துவது மட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. மேலும் இது அதீத பசியை கட்டுப்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மூட்டு வழியை குறைகிறது:
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு சமந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். நெய்யில் உள்ள Anti Inflammatory பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது மூட்டுகளை வலுவாகவும் வைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
நெய்யில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் இது தொற்றுக்களை வர விடாமல் தடுக்கிறது. நோய்களை எதிர்த்து போராடும் வலிமையையும் உடலுக்கு வழங்குகிறது.
மூக்கடைப்பு பிரச்சனைகளுக்கு உதவுகிறது:
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சளி, இருமல் மற்றும் தொண்டை வலி பிரச்சனைகளை தடுக்கிறது.
புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது:
நெய் சாப்பிடுவதால் இயல்பாகவே நாள் உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கபடும். வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இரத்த செல்கள் புதுப்பிக்கப்படும். மேலும் இது புற்றுநோய் வரவிடாமல் தடுக்கிறது.
எளிய முறையில் நெய் தயாரிக்கும் முறை (How To Make Ghee)..!
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |














