கோஜி பெர்ரி பழத்தில் உள்ள ஆரோக்கியங்கள் என்னென்ன தெரியுமா.?

Advertisement

Goji Berry in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் கோஜி பெர்ரி பழம் என்றால் என்ன, அவற்றை சாப்பிடுவதினால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே நாம் சாப்பிடும் எல்லா வகையான பழங்களும் பல ஆரோக்கியங்கள் நிறைந்ததாக இருக்கும் அந்த வகையில் இந்த கோஜி பெர்ரி பழமானது உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பழங்கள் அதிகமாக விளையும் இடம் ஆசியா. இவை ஆசியாவை பூர்விகமாக கொண்டுள்ளது. இந்த பழங்கள் பல நாடுகளில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த பழத்தை ஆங்கிலத்தில் “Wolfberry” என்று சொல்வார்கள். மேலும் இவற்றின் பயன்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கிர்ணி பழம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா.?

கோஜி பெர்ரி நன்மைகள்:

கோஜி பெர்ரி மற்றும் அதனுடைய இலைகள் வணிக ரீதியாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பெர்ரி உணவுகள் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி பல அலங்கார பொருட்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த கோஜி பெர்ரி பழங்களை கொண்டு எண்ணெய்களும் தயாரிக்கப்படுகின்றன. சரும பிரச்சனைகளுக்கும் இந்த பழம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கண் பிரச்சினைகள்:

கண் பிரச்சனைகள் பொதுவாக சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரையும் ஏற்படும் ஒரு பாதிப்பு ஆகும். இவை இரத்தத்தில் ஏதேனும் சத்து குறைபாடுகள் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற பிரச்சனைகளின் பொழுது கேரட் மற்றும் அதிகம் பீட்டா கரோடின் உள்ள உணவுகளை எடுத்து கொண்டிருப்போம். இது போன்ற பிரச்சனைகள் சரி செய்ய இந்த கோஜி பெர்ரி பழம் இருந்தால் மட்டுமே போதும். இதில் அதிகப்படியான பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

சரும பிரச்னைகள்:

பொதுவாகவே நம் சருமத்தில் ஏற்படும் கருமை, முகப்பரு, முதிர்ந்த தோற்றம் போன்ற பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு கோஜி பெர்ரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அந்த பழத்தில் நிறைந்துள்ள அமினோ அமிலங்கள், தாதுக்கள் போன்றவை சருமத்தை பாதுகாப்பாகவும், சருமத்தில் ஏற்படும் அலர்ஜியில் இருந்து தடுத்து, முகத்தை மிருதுவாகவும், அழகாகவும் மாற்றிவிடும்.

கல்லீரல் பிரச்சினைகள்:

இந்த கோஜி பெர்ரி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இவை கல்லீரலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து சரிசெய்கிறது. அதிகமாக மது அருந்துபவர்களின் கல்லீரல் சீக்கிரமாக பாதிப்பு அடைய செய்கிறது. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு இந்த கோஜி பெர்ரி பழத்தை சாப்பிட்டு வரலாம். அதோடு மட்டுமின்றி கல்லீரலில் வளர கூடிய கட்டிகளையும் தடுப்பதற்கு உதவியாக இருக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil
Advertisement