திராட்சை விதையின் பயன்கள்
இன்றைய பதிவில் திராட்சை விதை நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். அந்த வகையில் திராட்சை விதை முக்கிய இடம் பெறுகிறது. அதை சாதாரண உடல் உபாதைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமன்றி சருமம் மற்றும் தோல் பராமரிப்பிற்கும் பயன்படுத்துவார்கள். அதனால் சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது. மேலும், நம் அனைவருக்கும் திராட்சை பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியும். ஆனால் அதிலிருக்கும் விதையில் அதிக நன்மைகள் இருக்கிறது. திராட்சை விதையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள், ஒமேகா 3, விட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அந்த வகையில் இன்றைய பதிவில் திராட்சை விதையில் உள்ள நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க..
இதய ஆரோக்கியத்திற்கு:

திராட்சை விதையில் நுண்ணூட்ட சத்துக்கள் இருப்பதால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. தினமும் திராட்சைவிதை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் . இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
புற்றுநோய் :
திராட்சை விதையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து. புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. திராட்சை விதையை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வருவதன் மூலம் புற்றுநோய் பிரச்சனையை சரிசெய்கிறது.
சரும ஆரோக்கியம் :

திராட்சை விதையில் ஆக்சிஜனேற்றம் இருப்பதால் இது சருமத்தில் ஏற்படும் அழற்சி பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. இதை, வாரம் இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் ஆகியவற்றில் இருந்து பாதுகாத்து முகத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
மூட்டுவலி :
மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை விதையை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் மூட்டுவலி பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. திராட்சை விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இது பயன்படுத்துவதன் மூலம் மூட்டு வலியை குறைக்க செய்கிறது.
நோய்எதிர்ப்பு சக்தி:

திராட்சை விதையில் விட்டமின் ஈ மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் திராட்சை விதையை தினமும் பயன்படுத்துவதன் மூலம் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
திராட்சை விதை பொடியை சூடான பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், நினைவாற்றலை அதிகரித்து நரம்பு மண்டலத்தை மேம்பட செய்கிறது.
காயங்களை சரிசெய்ய:

திராட்சை விதையில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், லினோலிக் அமிலங்கள் போன்றவை உள்ளன இது காயங்களை ஆற்ற உதவுகிறது. உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆறாத காயங்களை ஆற்றும் தன்மையை கொண்டுள்ளது .
நச்சுக்களை நீக்க:
திராட்சை விதையை தினமும் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதுமட்டுமில்லாமல் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் உடலை பாதுகாக்கிறது.
ஆப்பிள் ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்
திராட்சை விதை பயன்படுத்தும் முறை:

- திராட்சை விதையை நன்றாக காய வைத்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளலாம். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வரலாம்.
- திராட்சை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் உணவு மற்றும் சரும பராமரிப்பிற்கு பயன்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள்:
கலோரி -120 கி
கொழுப்பு -14 கி
சோடியம் -0 கி
கார்போஹைட்ரேட்டுகள்-0 கி
நார்ச்சத்து -0 கி
சர்க்கரை-0 கி
புரோட்டீன்-0 கி
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














