புற்றுநோயை குணமாக்கும் முள் சீத்தாப்பழம்..! Soursop Health Benefits..!

Soursop Health Benefits

முள் சீத்தாப்பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? Graviola fruit benefits..!

Soursop Health Benefits:- முள் சீத்தாப்பழம் பழம் வகைகளில் மிகவும் அதிக மருத்துவம் குணங்கள் நிறைந்த பழமாக விளங்குகிறது. இந்த முள் சீத்தாப்பழம் உயிர்கொல்லி நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்யை குணமாக்கும் வல்லமை வாய்ந்தது என்று அமெரிக்கா ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவங்களில் இந்த முள் சீத்தாப்பழத்தை Chemotherapy-க்கு மாற்று மருந்தாக இந்த முள் சீத்தாப்பழம் மற்றும் இதன் இலைகளை அதிகளவு பயன்படுத்துகின்றனர். அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் என்பதால் சந்தைகளில் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

சரி இந்த பதிவில் முள் சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம் வாங்க.

newஇளமையை மீட்டுத்தரும் அவகோடா பழத்தின் நன்மைகள்..!

 

முள் சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:-

இந்த முள் சீத்தாப்பழத்தில் அதிகளவு ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் வைட்டமின் சி, வைட்டமின் B1, B2 சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், தயாமின், நியாசின், ரிபோப்ஃபிளேவின், பிளேவனாய்டு போன்ற சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது.

முள் சீத்தாப்பழம் பயன்கள் / Soursop Health Benefits..!

புற்றுநோய் குணமாகும்:-

புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் முள் சீத்தாப்பழத்தை சாப்பிடுவதினால் இவற்றில் உள்ள Acetogenin புற்றுநோய் செல்களை நேரிடியாக எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. மேலும் இவற்றில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்பு கொண்டது என்பதால் உடலில் புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். குடல் புற்றுநோய், கணையப் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரலில் புற்றுநோய் என்று 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமைவாய்ந்தது என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவரும் இந்த முள் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவரலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்:-

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முள் சீத்தா பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி இரத்த வெள்ளையணுக்களை உடலில் அதிகரிக்கும் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

அல்சர் குணமாக:-

அல்சர் நோயால் தினமும் அவதிப்படுபவர்கள் இந்த முள் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம் இதனால் வயிற்று புண் என்று சொல்லக்கூடிய அல்சர் குணமாகும். அதேபோல் கேஸ்ட்டிக் அல்சர் என்று சொல்லக்கூடிய குடல் புண்களையும் ஆற்றும் தன்மை முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கிறது. மேலும் இவற்றில் உள்ள நார்ச்சத்து மலத்தை எளிதில் வெளியேற்ற உதவிபுரிகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தினை சாப்பிடுவதினால் பிரச்சனை சரியாகும்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க இது ஒன்னு போதும்..!

கீல்வாதம் குணமாக:

கீல்வாதம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த முள் சீத்தாப்பழத்தை சாப்பிடலாம். இதனால் கீல்வாதம் பிரச்சனை விரைவில் சரியாகும்.

மன அழுத்தம் குறைய:-

முள் சீத்தாப்பழத்தில் உள்ள அமினோ அமிலம் மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்களை கட்டுபடுத்தும். இதனால் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்யும். எனவே அதிக வேலைபழு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவேண்டும் என்றால் இந்த முள் சீத்தாப்பழத்தை சாப்பிடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்