கிரீன் ஆப்பிள் பயன்கள்
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் கிரீன் ஆப்பிளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்க இருக்கின்றோம். கிரீன் ஆப்பிள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். கிரீன் ஆப்பிள் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் சரிசெய்யும் தன்மை கொண்டுள்ளது. இது வழக்கமாக நாம் சாப்பிடும் சிவப்பு ஆப்பிளை விட கிரீன் ஆப்பிளில் கலோரிகள் குறைவாக இருக்கும். இதில் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளன. கிரீன் ஆப்பிளில் வைட்டமின், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடெண்ட் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், கிரீன் ஆப்பிள் புளிப்பாக இருந்தாலும் அதனை சாப்பிடும் போது மிகவும் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. கிரீன் ஆப்பிள் தான் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழக்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. கிரீன் ஆப்பிளை நீரில் கழுவி விட்டு தோலுடன் சாப்பிட வேண்டும். அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆப்பிளை சாப்பிடுவது உடலுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. இந்த வகை கிரீன் அப்பிளின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
கிரீன் ஆப்பிள் நன்மைகள்

ஜீரண மண்டலத்தை அதிகரிக்கிறது
சிவப்பு ஆப்பிளை விட கிரீன் ஆப்பிளில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகமாக இருக்கின்றன. இதில் அதிகமான நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை ஜீரண மண்டலத்தை அதிகரிக்க செய்கிறது. கிரீன் ஆப்பிளில் எளிதில் கறையக் கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால். நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை சரிசெய்து அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு
கிரீன் ஆப்பிளில் இருக்கும் ஆன்டி ஆக்சிடெண்ட் உடலில் இருக்கும் கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி உடலின் உள்ள உறுப்புகளை சுத்தம் செய்ய உதவுகிறது. குறிப்பாக கல்லீரலை சுத்தம் செய்து ஹெபடைடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. கிரீன் ஆப்பிளை தோலுடன் சாப்பிடும் போது கல்லீரலை பாதுகாப்பதுடன் ஜீரண மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
கிரீன் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் 52% அளவிற்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின்களும் ,மினரல்களும் இரத்தம் உறைதல் தடுத்து இரத்த குழாயில் கொழுப்புகள் தங்காமல் தடுக்கிறது. கிரீன் ஆப்பிள் உயர் இரத்த அழுத்தத்தையும்,கொலஸ்ட்ரால் பிரச்சனையும் சரிசெய்கிறது.
சரும பிரச்சனைக்கு தீர்வு
கிரீன் ஆப்பிளில் அதிகமான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் கிரீன் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தடுக்கிறது. எக்ஸிமா போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. சரும புற்றுநோய் வராமல் தடுப்பதில் கிரீன் ஆப்பிள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளமையாக வைக்க
கிரீன் ஆப்பிளில் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் இளமையிலையே வயதான தோற்றம் வருவதை தடுக்கிறது. மேலும் கிரீன் ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஏ அதிகமாக இருப்பதால். இதிலிருக்கும் பினைல்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கருவளையம் ஆகியவை வராமல் தடுத்து நிறுத்துகிறது . இதன் மூலம் முகத்தை பொலிவாக வைத்திருக்க உதவுகிறத .
முடி வளர்ச்சி அதிகப்படுத்த
கிரீன் ஆப்பிளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை உறுதியாகவும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இது முடியின் அடர்த்தியை அதிகப்படுத்த உதவுகிறது. கிரீன் ஆப்பிளின் தோலை அரைத்து முடியின் வேர்வரை தேய்த்து 15 நிமிடதிற்கு பிறகு குளித்து வந்தால். பொடுகு தொல்லையை நீக்கி முடியின் வேர்கள் வலுப்பெற செய்கிறது.
உடல் எடையை குறைக்க
கிரீன் ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. கிரீன் ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால். இதில் இருக்கும் மினரல் மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட்கள் உடலில் கெட்ட கொழுப்பை தேங்க விடாமல் செய்து உடல் எடையை குறைக்க செய்கிறது.
நுரையீரல் ஆரோக்கியம்
கிரீன் ஆப்பிளில் இருக்கும் ஃபிளவனாய்டுகள் நுரையீரலை பலப்படுத்தி ஆஸ்துமா பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
கண் ஆரோக்கியம்
கிரீன் ஆப்பிளில் வைட்டமின் ஏ சத்துக்கள் இருப்பதால், இது பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. இந்த ஆப்பிளில் நீர்ச்சத்துக்கள் இருப்பதால் கண்ணில் ஏற்படும் வறட்சியை தடுக்கிறது.
பப்பாளி ஜூஸ் தினமும் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
கிரீன் ஆப்பிள் தீமைகள்
ஒவ்வாமை
சிலருக்கு ஆப்பிள் சாப்பிடுவதால் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வாமை பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு ஆப்பிள் சாப்பிடும் போது தோலில் அரிப்பு ,வீக்கம்மற்றும் தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வரக் கூடும்.
வயிற்று பிரச்சனைகள்
கிரீன் ஆப்பிளில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், இதை அதிகமாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், வாய்ப்புண்மற்றும் வயிற்றில் அமிலத்தன்மை போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆப்பிள் விதைகள்
ஆப்பிள் விதைகளில் சயனைடு என்ற நச்சுப்பொருள் இருப்பதால், விதைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |














