பச்சை மிளகாய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா ?

Advertisement

Are There So Many Benefits Of Eating Green Chillies In Tamil

நாம் அனைவருமே காய்கறிகளை உணவில் உண்டுவருகிறோம். ஏனெனில் அதில் அதிக சத்துக்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு காய்கறியில் ஒவ்வொரு சத்துக்கள் உண்டு அதனால் நாம் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவோம். மாமிச உணவை காட்டிலும் காய்கறிகளில் அதிக புரத சத்துக்கள் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பச்சை மிளகாய் நாம் காரத்திற்காகத்தான் உணவில் சேர்ப்பதாக நாம் நினைத்து வருகிறோம். ஆனால் பச்சை மிளகாயில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. இது பல நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. அது என்ன என்பதை கீழே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்டி ஆக்ஸைடு :

pachai milagai

பச்சை மிளகாயில் நிறைய ஆன்டி ஆக்ஸைடு நிறைந்துள்ளது. இது உங்கள் உடலை நாள் முழுவதும் பிரசாக இருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமால் சருமத்தையும் அழகாக்கிறது. இதில் காணப்படும் ஆன்டி ஆக்ஸைடு சரும செல்களை புதுப்பித்து சருமம் மினுமினுப்பாக இருக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

பச்சை மிளகாயில் வைட்டமின் சி சத்துக்கள் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்க செய்கிறது. அதுமட்டுமின்றி பருவமாற்றத்தால் ஏற்படும் நோய்களையும் தடுக்க செய்கிறது.

வைட்டமின் ஏ :

பச்சைமிளகாயில் வைட்டமின் சி  ஓடு வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது. இதனால் கண்கள் பாதிப்பு குறைகிறது. கண்கள் தெளிவாக மங்குன பார்வை குறைபாடு போன்றவற்றை சரிசெய்கிறது.

நார்ச்சத்து :

பச்சைமிளகாயில் அதிக நார்ச்சத்து காணப்படுகிறது. இது குடல் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை தடுக்கிறது. அதோடு செரிமான கோளாறு இருந்தாலும் அதையும் சரி செய்கிறது. செரிமான பிரச்சனை இருப்பவர்கள் பச்சைமிளகாய் சேர்த்து துவையலோ சட்னியோ செய்து சாப்பிடலாம். இது உங்கள் செரிமான திறனை அதிகரிக்கும்.

புற்று நோயை தடுக்கும் பச்சைமிளகாய் :

உண்மையில் பச்சை மிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸைடு புற்று நோயை குணப்படுத்தும் என NCBI ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. பச்சை மிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸைடு உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.இதனால் உடலில் இருக்கும் செல்கள் தூய்மையாக இருப்பதால் புற்றுநோய் வராமல் தடுக்க முடிகிறது.

இதயத்தை வலுப்படுத்தும் :

பச்சை மிளகாயில் நிறைய வைட்டமின்கள் மற்றும் பொட்டசியம், கால்சியம், மிக்னீசியம் நிறைந்துள்ளன இந்த சத்துக்கள் இதயத்தை வலுப்படுத்த உதவுகிறது. பச்சை மிளகாயில் காணப்படும் காரம் வளர்ச்சிதை மாற்றங்களுக்கும் உதவுகிறது.

குடைமிளகாய் பயன்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement