கொய்யா பழம் பயன்கள் | Koiya Palam Payangal in Tamil
நம்முடைய ஊரில் எளிமையாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று இந்த கொய்யா. கொய்யா பழத்தை வீட்டில் பீஸ் போட்டு வைத்தால் போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலி செய்து விடுவார்கள். அந்த அளவிற்கு கொய்யா பழமானது சுவை அதிகமாக உள்ள பழமாக இருக்கிறது. சுவை மட்டுமல்லாமல் கார்போஹைட்ரேட்டுகள் – 14.32 கிராம், சர்க்கரை (8.92 கிராம்), கொழுப்பு (0.95 கிராம்), நார்சத்து (5.4 கிராம்), பொட்டாசியம் (417 மி.கி), வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஏராளமான சத்துக்களும் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்து நிறைந்துள்ள கொய்யா பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.
திராட்சை பழம் நன்மைகள் |
இரத்த அளவை அதிகரிக்க:
நமது உடல் இரத்தத்தில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதை தடுத்து நிறுத்துகிறது கொய்யா பழம். இரத்தமானது கெட்டியாகாமல் அதன் நீர்ம தன்மையை பாதுகாக்கும் சக்தியும் கொய்யா பழத்திற்கு உண்டு. இந்த கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்கள் அனைத்தும் நீங்கி ரத்தம் சுத்தமாகிறது. ரத்ததின் அளவையும் அதிகரிக்க செய்கிறது.
புற்றுநோய் குணமாக:
புற்றுநோய் வராமல் தடுக்க கொய்யா பழத்தை சாப்பிட்டு வரலாம். பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் இப்போது புற்றுநோய் தாக்கம் அதிகமாகிவிட்டது. கொய்யா பழத்தில் லைகோபீன் என்ற காம்பவுண்டு இருக்கிறது. இதனால் புற்றுநோய் இருக்கும் ஆண்கள் கொய்யா பழம் சாப்பிடுவதால் புராஸ்டேட் என்று சொல்லக்கூடிய புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.
வைட்டமின் சி குறைபாடு நீங்க:
நமது உடலில் வைட்டமின் சி சத்தானது சரியான அளவில் இருந்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படும். இதற்கு வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். கொய்யா பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அடிக்கடி கொய்யா பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.
ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் |
சர்க்கரை நோய் குணமாக:
சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுகளை பயந்துகொண்டே சாப்பிடுவார்கள். குடிக்கும் தேநீர்களில் சர்க்கரை அளவினை குறைவாகவும், இனிப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பார்கள். கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை தயக்கம் இல்லாமல் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறைந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் எடை குறைய:
சிலருக்கு உடலில் தேவையில்லாத கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்புகள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக்கொண்டு, அவ்வப்போது தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் அடிக்கடி பசி உணர்வு பிரச்சனை குறையும். இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேராமல் உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்.
லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |