கொய்யா இலை நன்மைகள் | Guava Leaves Uses in Tamil
Guava Leaf Uses in Tamil: எல்லோருக்கும் கொய்யா பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி தான் தெரியும். ஆனால் கொய்யாவில் இருக்கும் இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கொய்யா இலையில் புரதம், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை அனைத்தும் உடலுக்கு பல விதமான நன்மைகளை செய்து வருகின்றன. இன்னும் கொய்யா இலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.
சத்துக்கள்:
கொய்யா இலை நன்மைகள்: வைட்டமின் B6, கோலைன், மாங்கனீசு, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், ஆன்டி ஆக்சிடன்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
சர்க்கரை நோய்:
- Guava Leaves Benefits in Tamil: உடலில் இன்சுலின் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு டம்ளர் தண்ணீரில் கொய்யா இலையை போட்டு 1 டம்ளர் தண்ணிர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
- அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் சர்க்கரையின் அளவு உடலில் குறையும். அது மட்டும் அல்லாமல் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள உதவும்.
உடல் எடை குறைய:
- கொய்யா இலை நன்மைகள்: உடல் பருமனாக இருப்பவர்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க கொய்யா இலை மிகவும் உதவியாக இருக்கும். நான்கு கொய்யா கொழுந்து இலையை அரைத்து அதன் சாற்றை பிரித்தெடுக்கவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகான தோற்றத்தை பெற முடியும்.
- கொய்யா இலையில் டீ போட்டு குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து நல்ல கொழுப்பு உருவாவதற்கு உதவியாக இருக்கும்.
செரிமான பிரச்சனை:
- Guava Leaves Benefits in Tamil: கொய்யா இலை கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.
- இதை சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக பருக வேண்டும். மூன்று வேலை குடித்து வந்தால் செரிமான பிரச்சனை அனைத்தும் நீங்கும்.
தொண்டை புண்:
- Koyya Ilai Payangal: கொய்யா கொழுந்து இலையை வாயில் போட்டு மென்று அதன் சாரை குடிப்பதன் மூலம் வாய்ப்புண், தொண்டை புண், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு, பல் ஈறு வீக்கம், ரத்தக்கசிவு, பல் வலி போன்றவற்றை குணப்படுத்தும்.
- பல் சொத்தை மற்றும் பல்லை வலுப்படுத்தவும் உதவும்.
புற்றுநோய்:
- Koyya Ilai Payangal Tamil: புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க இதில் இருக்கும் கரோட்டினாய்டுகள், Flavonoids உதவுகிறது.
- மேலும் பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோய், Prostate புற்றுநோயை குணப்படுத்தவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
- Guava Leaves Benefits in Tamil: நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் சிலருக்கு அடிக்கடி இருமல், சளி போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வரலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், மற்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கும்.
சரும பிரச்சனைகளுக்கு:
- guava leaves benefits: இந்த இலையில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
- மேலும் முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
கொய்யா இலை டீ போடுவது எப்படி?
- Koyya Ilai Uses: முதலில் கொய்யா இலையை தண்ணீரில் கழுவி கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த கொய்யா இலையை போட்டு கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் கொதித்தவுடன் அதை வடிகட்டி கொள்ளவும். பின் அதில் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிக்கவும்.
அவுரி இலை பயன்கள் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |