நாக்கு மீனில் உள்ள பயன்கள்
இன்றைய பதிவில் ஹாலிபட் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். இந்த மீனை ஆங்கிலத்தில் ஹாலிபட் மீன் என்றும் தமிழில் நாக்கு மீன் என்றும் அழைக்கப்படுகிறது. ஹாலிபட் மீன் உலகின் பல பகுதிகளில் முக்கியமாக அமெரிக்க மற்றும் லத்தீன் பகுதிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வடக்கு பசிபிக் பெருங்கடலை பூர்வீகமாக கொண்டுள்ளது. இந்த வகை மீனை கிரில் செய்வதிலிருந்து வறுப்பது போன்ற பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் , ஹாலிபட் மீனில் கலோரி,புரதம், கொழுப்பு, வைட்டமின் டி, செனிலியம் , ஒமேகா-3 மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.ஹாலிபட் மீனில் நியாசின் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் நரம்பு மண்டலத்தை அதிகரிக்க செய்கிறது.இதுமட்டுமல்லாமல் மூளை நினைவாற்றல் அதிகரிக்க, எலும்புகளை வலுப்படுத்த மற்றும் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. ஆகவே, இந்த பதிவில் ஹாலிபட் மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க….
ஹாலிபட் மீன் என்றால் என்ன ?
ஹாலிபட் மீனிற்கு நாக்கு மீன் என்ற மற்றோரு பெயர் இருக்கிறது. இவை பிறகும்போது சால்மன் மீன் போலவே இருக்கும். மீன் முதிர்ச்சியடையும்போது அது 8 அடி வரை வளரும். இதனுடைய கண்கள் இரண்டும் அதன் தலையின் மேல்பகுதியில் இருக்கும்.இந்த மீன்கள் 55 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
விரால் மீன் நன்மைகள் மற்றும் தீமைகள்
உடல் எடையை குறைக்க:
ஹாலிபட் மீனில்இருக்கும் கலோரிகள் மற்றும் கரைய கூடிய கொழுப்புகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. வாரம் இரண்டு முறை உணவில் ஹாலிபட் மீன் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இரத்த சோகை :
ஹாலிபட் மீன் இரும்புசத்து உள்ளதால், இது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த சோகை பிரச்சனையை சரிசெய்யவும். உடலில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகளை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
சரும ஆரோக்கியம் :
ஹாலிபட் மீன் சாப்பிடுவதன் மூலம் இதிலிருக்கும் ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் கொலாஜின் அளவை அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க முடியும்.
எலும்புகளை வலுப்படுத்த :
ஹாலிபட் மீனில் வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் டி உடலில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. இதிலிருக்கும் மெக்னீசியம் எலும்புகள் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் :
இதிலிருக்கும் ஒமேகா-3 மற்றும் வைட்டமின் டி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்கு அதிக நன்மையை அளிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இதனை அளவாக சாப்பிடுவது மற்றும் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு சாப்பிடுவது நல்லது.
மூளையின் வளர்ச்சிக்கு:
ஹாலிபட் மீனில் உள்ள DHA மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. இது அறிவாற்றலை அதிகரிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் மனசோர்வு மற்றும் பதட்டமின்மை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
| இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |














