தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்.!
Headache types in tamil:- தலையில் நீர் கோர்த்தல் (நீர்க்கோவை நீங்க) சரியாக பாட்டி வைத்தியம் குறிப்புகள் சிலவற்றை இங்கு படித்து தெரிந்து கொள்வோம்.
பாட்டி வைத்தியம் குறிப்பினை தெரிந்து கொள்வதற்கு முன் தலையில் ஏன் நீர் கோர்க்கிறது என்பதன் காரணங்களை முதலில் தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..! |
தலையில் ஏன் நீர் கோர்க்கிறது?
உடலில் நோய் எதிர்ப்பு குறைதல், புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பது, அல்லது அதிகமாக வேலை செய்வது, மழை மற்றும் பனிக்காலங்களில், தலைக்கு எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறையை செய்யாமல் இருப்பது, இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்வது, தலைக்கு குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் இருப்பது ஆகிய காரணங்களால் நம் தலையில் நீர்கோர்த்து கொள்ளும்.
தலையில் இவ்வாறு நீர் கோர்த்துக்கொண்டால் தலை பாரமாக இருக்கும், அதிகமாக தலைவலி ஏற்படும் இதனுடன் நாளடைவில் ஜன்னி பிடித்து கொள்ளும்.
இதனால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கும், வைரஸ் பரவுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். தலையில் நீர் கோர்த்து கொள்ளும் பிரச்சனை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் ஏற்படும்.
குழந்தைகளுக்கு தலைவலி வருவதற்கான காரணங்கள் என்ன? |
தலையில் நீர் ஏற்றம் குறைய பாட்டி வைத்தியம்:
பொதுவாக தலையில் அதிகமாக நீர் கோர்த்து கொண்டால் இரவு உறங்குவதற்கு முன் அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அவற்றில் பாதியளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து பத்திரமாக இறக்கி அவற்றில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் 2 கைப்பிடியளவு நொச்சி இலை சேர்க்க வேண்டும்.
பின் இந்த நீரில் இருந்து வரும் ஆவியினை முகத்தில் ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிக்கும் போது 2-3 போர்வையினை போர்த்திக்கொண்டு முகத்தில் ஆவி பிடியுங்கள். இவ்வாறு முகத்தில் ஆவி பிடிப்பதினால் தலையில் உள்ள நீர் அனைத்தும் வெளியேறிவிடும்.
மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருளாகவும் நொச்சி இலை தலைவலி, சளி, இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கும் பயன்படுகிறது.
தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம் குறிப்பினை தலையில் நீர் கோர்த்து கொள்ளும் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் தலைவலியால் தினமும் அவதிப்படுபவர்கள் வாரத்தில் இரண்டு முறை பின் பற்றி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இயற்கையான முறையில் தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..! |
தலையில் நீர் கோர்த்தல் என்ன செய்வது? Headache types in tamil..!
தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்: 1
Thalaiyil neer korthal vaithiyam – கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலைவலி (headache types in tamil) குணமாவதுடன், தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை இருந்தால் அந்த பிரச்னையும் சரியாகிவிடும்.
தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்: 2
Thalaiyil neer korthal vaithiyam – திருநீற்றுப் பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை சரியாகும்.
தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்: 3
Thalaiyil neer korthal vaithiyam – கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும் மேலும் தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை இருந்தால் அதுவும் குணாகும்.
தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்: 4
Thalaiyil neer korthal vaithiyam – நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
தலையில் நீர் கோர்த்தல் பாட்டி வைத்தியம்: 5
Thalaiyil neer korthal vaithiyam – தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை உள்ளவர்கள் குப்பைமேனி இலை, மிளகு, நொச்சி இலை, வெற்றிலை, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி (headache types in tamil), தலை பாரம், தும்மல், இருமல், ஜன்னி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |