தினமும் 02 வாழைப்பழம் சாப்பிட்டால்..! என்ன நன்மைகள் தருகிறது தெரியுமா?

health benefits eating banana daily in tamil

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால்

வணக்கம் நண்பர்களே.! தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி காண்போம். நம் ஊரில் மலிவாகவும், நடுத்தர மக்களும் வாங்கி சாப்பிட கூடிய பழங்களின் ஒன்று வாழைப்பழம்.  இந்த பழத்தில் பல வகைகள் உள்ளன.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு 3 பழங்களுக்கு மேல் எடுத்தால் உடலுக்கு தீங்கினை விளைவிக்கும். வாங்க ஒரு நாளைக்கு எத்தனை பழங்கள் எடுத்து கொள்ளலாம் அதனால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ உப்பு தண்ணீரில் 1 நிமிடம் ஊறிய அன்னாசிப்பழத்தை சாப்பிட்டால் அவ்வளவு நன்மையா ..!

உடல் சோர்வு நீங்க:

 

உடல் சோர்வு நீங்க

உடல் சோர்வடையாமல் இருப்பதற்கு நம் உடம்பில் உள்ள சத்துக்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வேண்டும். வாழைப்பழத்தில் கலோரிகளும், பொட்டாசியமும் அதிகமாக இருக்கிறது. ஆகவே நம் உடலின் சோர்வு நிலையை தவிர்ப்பதற்கு தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.

மலச்சிக்கல் உடனே தீர:

மலச்சிக்கல் உடனே தீர

மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழம் தினமும் எடுத்து கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்கு முன் ஒரு வாழைப்பழம் எடுத்துக்கொண்டால் மலசிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்க:

 banana benefits in tamil

வாழைப்பழம் இரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் நரம்பு மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது. உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அமினோ அமிலங்களை வளர்சிதை மாற்றம் செய்யவும் பயன்படுகிறது.

செரிமான பிரச்சனை:

வாழைப்பழம் செரிமானம் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

மாதவிடாய் வலி குறைய:

மாதவிடாய் வலி குறைய

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் எரிச்சல் மற்றும் வலிகள் அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதனால் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகளிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாழைப்பழத்தில் பல வகையான ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திலும் எண்ண முடியாத அளவிற்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அடங்கியுள்ளது.

இந்த வாழைப்பழமானது கோடை காலத்திலும் சரி, மழை காலத்திலும் கிடைக்கக்கூடிய அறிய வகை பழமாகும். வாழைப்பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் போன்ற பல ஏராளமான சத்துக்கள் இருப்பதால் இந்த பழத்தினை நாம் தவறாமல் உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் காலையில் எழுந்ததும் ஒரு வாழைப்பழமும், இரவு தூங்குவதற்கு முன் ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மைகளை தருகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்