ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Aatu Eral Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காம் ஆரோக்கியம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம். ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…

ஈரல் என்றாலே நம்மில் சிலர் விரும்பவே மாட்டோம். ஈரலே பிடிக்காது என்று சொல்பவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இந்த ஈரலில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. இதில் தனித்துவமான சுவையும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது. ஈரலின் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பின் ஈரல் பிடிக்காது என்று சொல்லவே மாட்டீர்கள்…!

ஆட்டு ஈரலின் நன்மைகள்: 

பொதுவாக சிலர் இறைச்சியை அதிகளவில் விரும்பி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளில் பல வகையான சத்துக்கள் உள்ளன. அதிலும் ஆட்டின் ஒவ்வொரு பாகங்களும் பலவகையான சத்துக்களை கொண்டுள்ளது. அதுபோல ஆட்டு ஈரலில் எண்ணற்ற பயன்கள் உள்ளது. ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது என்று பார்ப்போம்.

இதுபோன்ற இறைச்சியில் உள்ள கல்லீரலில் புரத சத்துக்கள் அதிகம் உள்ளன. “வைட்டமின் A, வைட்டமின் B2, வைட்டமின் B12 மற்றும் பாஸ்பரஸ், தாமிரம், செலினியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் போன்ற தாதுக்களின் ஊட்டச்சத்துக்கள்” நிறைந்துள்ளன.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

இரத்தசோகையை குணமாக்கும்:

இரத்தசோகையை குணமாக்கும்

இரத்தச்சோகை குணமாகும். உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய  ஆற்றலை கொண்டுள்ளது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் உடலில் புதிய இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உடலில் இரத்தம் அதிகரித்து இரத்தசோகை குணமாகிறது.

ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:

ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

கர்ப்பிணிகள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கிறது. கற்ப காலங்களில் அவர்களுக்கு இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும். அப்பொழுது ஆட்டு ஈரல் சாப்பிட்டு வர உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து இரத்தஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலுக்கு வலிமை சேர்க்கிறது:

உடலுக்கு வலிமை சேர்க்கிறது

உடலை வலிமையாக்குகிறது. உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. இதில் புரதசத்து அதிகம் இருப்பதால் உடலை வலிமையாக வைக்கிறது. தசைகளை வலிமையாக வைக்கிறது. எலும்புகளுக்கு வலிமையை தருகிறது.

உடல் எடை குறைய நார்ச்சத்து உணவுகள்

உடல் எடை அதிகரிக்கிறது:

உடல் எடை அதிகரிக்கிறது

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறவில்லை என்று கவலைபடுபவர்கள் இந்த ஆட்டு ஈரலை வாரம் 2 முறை சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து இளைத்த உடல் ஏறும். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் உடல் இளைத்தவர்கள் கூட இந்த ஆட்டு ஈரலை சாப்பிடுவதால் இளைத்த உடல் தேறும்.

உடல் சோர்வை போக்குகிறது:

உடல் சோர்வை போக்குகிறது

உடம்பில் ஏற்படும் உடல் சோர்வை போக்குகிறது. ஆட்டு ஈரலில் உள்ள சத்துக்கள் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் சோர்வை போக்குகிறது. இதன்  மூலம் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கிறது. உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அவதிப்படுபவர்கள் இந்த ஆட்டு ஈரலை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பிற நோய்கள் தாக்காமல் நம்மை பாதுகாக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்