கால்சியம் மற்றும் இரும்புச்சத்து
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் நிறைந்துள்ள உணவுகள் என்னவென்றும் அவைற்றை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் மாற்றங்கள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் அதிகமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியங்களையும் கொண்டவையாக இருக்கும், ஆனால் அதே சில உணவு பொருட்கள் உடலுக்கு பாதிப்பை தரக்கூடியதாக இருக்கும். மேலும் நாம் சாப்பிடும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
துவர்ப்பு உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா.! |
வேர்க்கடலை | Peanut:
உணவுகளில் அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது வேர்க்கடலை. இந்த வேர்க்கடலையில் கால்சியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
தினமும் வேர்க்கடலையை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால், கை, கால், மூட்டுகள் போன்றவை நன்கு வலுவடையும். அதோடு மூளையின் செயல் திறன் நன்றாக வளர்ச்சியடையும், கருப்பை பலம்பெறும், நினைவாற்றல் திறன் அதிகரிக்கும், அதிகமான உடல் சோர்வு நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த வேர்க்கடலையை சாப்பிடுவதை மற்றும் தவிர்ப்பது நல்லது.
தேங்காய் | Coconut:
இந்த தேங்காயில் அதிகமான இரும்புச்சத்து மற்றும் உயர் தரமான Antioxidant போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. தேங்காவை பச்சயாக சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருகிறது. தேங்கையுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதால் உடலில் ஏற்பட கூடிய கை, கால் வீக்கம் மற்றும் வயிற்று புண்கள் சரியாகும்.
முருகைக்கீரை | Drumstick Leaves:
முருங்கை கீரையில் அதிகமான கால்சியங்களும், இரும்புச்சத்துக்களும் நிறைந்துள்ளது, இவற்றை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது இரத்த சோகை, எலும்பு தேய்மானம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், ஆண் பெண் மலட்டு தன்மை, கருப்பை கோளாறுகள், கண் பார்வை குறைபாடு போன்ற எந்தவிதமான குறைபாடுகள் இருந்தாலும் கீரையை சாப்பிடுவதால் குணமாகிவிடும்.
பேரிச்சைபழம் | Date fruit:
பேரிச்சையில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது, இந்த பேரிச்சையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. தினமும் பேரிச்சையை சாப்பிட்டு வருவதால் கண் பார்வை கோளாறுள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கருவேப்பிலை | Curry leaves:
பொதுவாகவே எல்லாருடைய வீட்டிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் பொருள் கருவேப்பிலை, இந்த கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, B மற்றும் C சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளது. தினமும் பத்து கருவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வருவதால் உடலில் இருக்க கூடிய கெட்ட கொழுப்புகளை குறைக்கும், உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும், தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும், கருப்பை போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.
கருப்பு கொண்டைக்கடலை | Black chenna:
இந்த கொண்டைக்கடலையில் அதிகமான கால்சியம், இரும்புசத்து, புரதம் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு, முடி உதிர்வு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடல் ஆரோக்கியத்தை மேம்ப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
எள் | Sesame Seeds:
எள் தானியத்தில் வைட்டமின்கள், கால்சியம் போன்ற அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவற்றை வாரத்தில் மூன்று முறை எள் உருண்டையாக செய்து சாப்பிட்டு வருவதால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும். அதேபோல் எள் எண்ணெய் சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் எலும்புகள் வலுப்பெற்று, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகிவிடும்.
மாதுளை | Pomegranate:
மாதுளையில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் சாப்பிட்டு வருவதால், இரத்த சோகை, பெண்களுக்கு கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும், உடலில் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் தடுக்கும், அதுமட்டுமின்று இதனுடைய தோலிலும் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து குறிப்புகளையும் தினமும் சாப்பிட்டு வருவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |