மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..! Heart Attack Symptoms in Tamil..!

Advertisement

Heart Attack Symptoms In Tamil

ஆரோக்கியம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

சரி இந்த பகுதியில் மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? (Heart Attack Symptoms In Tamil) மாரடைப்பின் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடையை தெரிந்து கொள்வோம் வாங்க..!

இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்..!

மாரடைப்பு என்றால் என்ன?

தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது.

ரத்தக்குழாயில் அடைப்பு எப்படி ஏற்படுகிறது?

ரத்தக்குழாயின் தசைச்சுவர் உள்ளிருந்து வெளியே மூன்று அடுக்குகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு அடுக்குகளுக்கு இடையில், பிறந்த ஓரிரு ஆண்டுகளிலேயே நூலாடை போல கொழுப்புச் சத்து (Fatty Streak) படிய துவங்குகிறது. காலப்போக்கில் சில காரணங்களால் அது வளர்ந்து கொழுப்பு படிவமாகி (Plaque) ரத்தத்தின் சீரான ஓட்டத்திற்கு தடைக்கற்களாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இத்தடை மேட்டில் விரிசல் உருவாகி ரத்தக்குழாயினுள் வெடிக்கிறது. இதன் விளைவாக ரத்தத்தில் உள்ள சில அணுக்கள் இத்தடை மேட்டின் விரிசல் உள்ள பகுதியில் அமர்ந்து ரத்தத்தை உறைய வைத்து, ரத்தக்குழாயை முழுமையாக அடைத்துக் கொள்கிறது.

மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் :

மாரடைப்பில் இரண்டு வகை உள்ளது அவற்றில் ஒன்று நம்மால் கட்டுப்படுத்த முடிந்தவை, மற்றொன்று நம்மால் கட்டுப்படுத்த முடியாதவை.

  • புகைப்பிடித்தல்.
  • சர்க்கரை நோய்.
  • உயர் இரத்த அழுத்தம்.
  • அதிக உடல் பருமன் மற்றும் நன்மை செய்யும் கொழுப்பு (HDL) குறைவாக இருத்தல்.
  • அதிக கொலஸ்ட்ரால்.
  • உடல் உழைப்பு இல்லாமை.
  • குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு.
  • மன அழுத்தம், அதீத கோபம் மற்றும் படபடப்பு.
  • மரபியல் காரணிகள்.
  • இதுதவிர ரத்தக்குழாயில் எவ்வித அடைப்பு இன்றியும் மாரடைப்பு வரலாம். ஆனால் இது மிகச்சிலரையே பாதிக்கிறது.
புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (Cancer Fighting Foods)..!

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் (Heart Attack Symptoms In Tamil)..!

மாரடைப்பின் அறிகுறிகள் 1:

Heart Attack Symptoms in Tamil – நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

மாரடைப்பின் அறிகுறிகள் 2:

வியர்த்தல்,குமட்டல் மற்றும் மயக்கம் வருவதுபோல் உணர்தல்.

மாரடைப்பின் அறிகுறிகள் 3:

Heart Attack Symptoms in Tamil – மார்பின் முன்பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம். இங்கிருந்து வலி கழுத்து அல்லது இடக்கைக்கு பரவலாம்.

மாரடைப்பின் அறிகுறிகள் 4:

வாந்தி, இருமல், படபடப்பு மற்றும் 20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

மாரடைப்பின் அறிகுறிகள் 5:

Heart Attack Symptoms in Tamil – தீவிர நிலையில், இரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளித்து இறப்பும் நேரலாம்.

மாரடைப்பின் அறிகுறிகள் 6:

மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி, ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு விதமாக இருக்கலாம். பொதுவாக மாரடைப்பு வரும் போது முதலில் மெதுவாக நெஞ்சுவலியுடனோ அல்லது நெஞ்சில் ஒருவித கனமான இறுக்கத்துடனோ துவங்கி, பின் அவ்வலியின் தன்மை படிப்படியாக அதிகரிக்கலாம்.

மாரடைப்பின் அறிகுறிகள் 7:

Heart Attack Symptoms in Tamil – சிலருக்கு இத்தகைய உணர்வுகள் ஏதுமின்றியும் வரலாம். இவர்களுக்கு மாரடைப்பு வந்திருப்பதே பின்னாளில் வேறொரு காரணத்திற்காக இ.சி.ஜி., அல்லது எக்கோ பரிசோதனை செய்யும் போது தான் தெரியவே வரும். இதற்கு அமைதியான மாரடைப்பு என்று பெயர்.

யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement