பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் !!!

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள்

பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க???

Heart Attack Symptoms In Women

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இருப்பினும் இந்த பதிவில் யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்படுகின்றது, குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு அறிகுறிகள் என்ன ? என்பதையும் அவற்றை தடுக்கும் முறைகளையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க..!

மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

யாருக்கெல்லாம் மாரடைப்பு ஏற்படுகின்றது???

1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 1,00,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டர்கள் என்றால் நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாரடைப்பு அறிகுறிகள்..!

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் (Heart Attack Symptoms In Women):1

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான நேரங்களில் தெரிவதில்லை என்றும் வாஷிங்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு கூறுகிறது.

மிகத் தீவிரமாக மாரடைப்பு ஏற்படும் பட்சத்தில், அது மாரடைப்புதான் என்று தெரிந்தால் மட்டுமே அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இரத்த அழுத்தம் குறைய பாட்டி வைத்தியம்..!

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் (Heart Attack Symptoms In Women):2

நோயாளிகளின் அறிகுறிகளை வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்பதால், பெண்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை தெரிய வராமல் போய் விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் (Heart Attack Symptoms In Women):3

முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றவை பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் (Heart Attack Symptoms In Women):4

பொதுவாக மாரடப்பு விகிதம் பெண்களுக்கு குறைவு என்ற போதிலும், அவை ஏற்படும் அறிகுறிகள் தெரியாத போது, சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலாமல் போவதால், திடீர் மரணம் ஏற்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் (Heart Attack Symptoms In Women):5

மாரடைப்பு ஏற்படும் பெண்களுக்கு, அதற்கான அறிகுறிகள் வெகுநேரம் முன்பாகவே வந்திருக்கக்கூடும். எனவே மாரடைப்பு என்று தெரிய வந்தவுடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்புலன்ஸில் செல்வதே சிறந்தது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

அப்போது தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்தவரை அவர்களுக்கும், சிகிச்சை அளிப்பவர்களுக்கும் மாரடைப்பு என்று அறிந்து கொள்வதற்கே தாமதம் ஆவதாலேயே சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பைத் தடுப்பது எப்படி?

மாரடைப்பு வருவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தடுப்பு முறைகளைக் கட்டாயம் கடைபிடிக்கவும். மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.

1. அவர்கள் உண்ணும் உணவுகள் ஆரோக்கியமாகவும், உப்பு & கொழுப்புப் பொருட்கள் குறைவாகவும் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் & நார்ச்சத்துகள் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

2. அளவு மீறிய உடல் எடை உடையவர்கள் உடல் எடையைக் குறைத்தல் அவசியம்.

3. உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்தால் கட்டாயம் மாரடைப்பு ஏற்படுவத்தை தடுத்துவிட முடியும்.

4. புகைப்பிடித்தலை முழுவதுமாகக் கட்டாயம் நிறுத்த வேண்டும்.

5. நீரிழிவு நோய், அதிக அளவு இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்புச்சத்து உடையவர்கள் மருந்துகளை முறையாக உட்கொண்டு, உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்