குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..!

Advertisement

Heel Pain Home Remedies In Tamil

kuthingal pain relief in tamil: பெண்களை அதிகம் தாக்கும் குதிகால் வலி (heel pain) குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் தரையில் கால் எடுத்து வைக்கவே மிகவும் பயப்படும் அளவிற்கு குதிகால் வலி இருக்கும். குறிப்பாக எலும்பு தேய்வு காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்படுகிறது. கை, கால், இடுப்பு, முட்டி தோள்பட்டை வலி ஏற்படுவது போலவே இந்த குதிகால் வலியும் முதல் இடத்தை பெற்றுள்ளது.

குதிகால் வெடிப்பு நீங்க சில இயற்கை வைத்தியம்..!

 

சரி வாங்க குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம் (Heel Pain Home Remedies In Tamil) என்ன உள்ளது என்று இவற்றில் நாம் காண்போம்.

குதிகால் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணம்:

குதிகால் வலி நாட்டு மருத்துவம்: குதிகால் வலி (heel pain) ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கரடுமுரடுடான பாதைகளில் நடப்பது. அதிக எடையை தூக்குவது. முறையற்ற காலணிகள் அணிவது. கால்களில் செருப்பு போடாமல் நடப்பது.

அதிகமாக நடந்து கொண்டு அல்லது நின்று கொண்டிருந்தாலே குதிகால் வலி ஏற்படுகிறது. தண்ணீரில் அதிகமாக நடந்து செல்வது மற்றும் உடல் எடை அதிகரித்தாலும் இந்த குதிகால் வலி ஏற்படுகிறது.

குதிகால் வலி பாட்டி வைத்தியம்..! பகுதி – 2

குதி கால் வலி சரியாக இயற்கை வைத்தியம் (Heel Pain Home Remedies In Tamil):

குதிகால் வலி நீங்க என்ன வழி – நொச்சி இலை:

Kuthikal Vali Nivaranam in Tamil – குதிகால் வலி பிரச்சனையுள்ளவர்கள் இந்த இயற்கை வைத்தியம் ஒரு வாரம் முழுவதும், அதாவது ஏழு நாட்கள் வரை செய்து வந்தால் பிரச்சனை சரியாகும்.

குதிகால் வலி நாட்டு மருத்துவம் – தேவையான பொருட்கள்:

  • நொச்சி இலை
  • வாத முடக்கி
  • விளக்கெண்ணெய்

செய்முறை:

நொச்சி இலை மற்றும் வாத முடக்கி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு, ஒரு வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி, இந்த இலையை போட்டு வதக்கி அவற்றை குதிகாலில் வைத்து கட்டினால், குதிகால் வலி குணமாகும். இந்த முறையை 7 நாட்கள் வரை கட்டாயமாக செய்ய வேண்டும்.

குதிகால் வலிக்கு வைத்தியம் – எருக்கன் செடி:

குதிகால் வலி குணமாக – எருக்கன் செடியை ஐந்தாறு பறித்து கொண்டு அவற்றை நெருப்பில் வாட்டி அவற்றின் மீது சில நேரங்கள் வரை உங்கள் கால்களை வைத்திருந்தால் குதிகால் வலி குணமாகும்.

(அல்லது)

குதிகால் வலி குணமாக செங்கல் ஒன்றை எடுத்து கொள்ளவும் அவற்றை நெருப்பில் சுடவைத்து, அந்த கற்களின் மீது, இந்த ஐந்தாறு எருக்கன் செடியை வைத்து அதன் மேல் உங்கள் குதிகாலை வைத்து சிறுது நேரம் வரை காத்திருந்து பின்பு உங்கள் கால்களை அவற்றில் இருந்து எடுத்து விடவும்.

இவ்வாறு தினமும் இரண்டு முறை என்று ஒரு வாரம் வரை செய்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!!…

குதி கால் வலி சரியாக – திராட்சை:

திராட்சையில் ஆண்டி ஆக்சிடன்ட் அதிகம் உள்ளதால் குதிகால் வலி ஏற்படும் போது, ஒரு கிளாஸ் திராட்சை பழசாறு குடித்து வரலாம்.

Kuthikal Vali Nivaranam in Tamil – வெந்நீர் ஓத்திடம்:

குதிகால் வலி குணமாக (Heel Pain Home Remedies In Tamil) மிதமான சூட்டில் வெந்நீர் சுடவைத்து அவற்றில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து,

அந்த நீரில் சிறிது நேரம் வரை அதாவது 10 நிமிடம் வரை உங்கள் கால்களை வைத்திருந்தால் குதிகால் வலி குணமாகும். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

குதிகால் வலிக்கு வைத்தியம் – உடல் பயிற்சி:

அதாவது கால் பயிற்சியை தினமும் காலை மற்றும் மாலை என்று இரண்டு முறை செய்து வந்தாலே போதும் குதிகால் வலி சரியாகும்.

குதிகால் வலிக்கு வைத்தியம் – கால் பயிற்சி:

குதிகால் வலி நீங்க (Heel Pain Home Remedies In Tamil) நாற்காலியில் அமர்ந்து உங்கள் கால்கள் தரையில் படுமாறு வைக்க வேண்டும். பின்பு உங்களை கால் விரல்களை உள்பக்கமாக சுருக்கி விரிக்குமாறு 20 முறை செய்ய வேண்டும்.

பின்பு உங்கள் முன் பாதங்களை தரையில் தாளம் தட்டுவது போல 20 முறை உயர்த்தி இறக்க வேண்டும்.

பின்பு பின் பாதங்களை 20 முறை மேல் நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement