ஹீமோகுளோபின் அதிகரிக்க இது ஒன்னு போதும்..!

hemoglobin increase food

Hemoglobin Increase Food

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்: உடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பது இரத்தம் தான்.

இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்..! ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது…

முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தின் அளவானது அதிகமாக இருக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகும். பல கர்ப்பிணி பெண்களை குறி வைத்து தாக்குவதே இந்த இரத்த சோகை தான்…

ஹீமோகுளோபின் (hemoglobin increase food) அளவு உங்களது ரத்தத்தில் குறைந்தால், உங்களுக்கு களைப்பு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன…

இந்த ஹீமோகுளோபின் அளவை (hemoglobin increase food) நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.

இருப்பினும் இயற்கையாகவே பசலைக்கீரையில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. இந்த பசலைக்கீரையை மாதத்தில் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் கட்டாயமாக ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க (hemoglobin increase food) முடியும்.

சரி இந்த பசலைக்கீரையை வைத்து சுவையான சூப் தயாரித்து வாரத்தில் ஒருமுறை குடித்து வந்தால் உண்மையாகவே உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க முடியும் (hemoglobin increase food). சரி எப்படி பசலைக்கீரை சூப் தயார் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பசலைக்கீரை சூப் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:

  1. பசலைக்கீரை – ஒரு கப்
  2. சீரகம் – ஒரு ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
  4. தக்காளி – ஒன்று
  5. மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
  6. தண்ணீர் – 4 டம்ளர்
  7. உப்பு – தேவையான அளவு
  8. சிறிய வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு
  9. பச்சரிசி மாவு அல்லது சோளமாவு – ஒரு ஸ்பூன்

பசலைக்கீரை சூப் செய்முறை:

ஒரு கப் பசலைக்கீரை எடுத்துக்கொள்ளவும், அவற்றை சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும், எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அவற்றில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பின் பொடிதாக நறுக்கிய சிறிய வெங்காயத்தை இவற்றில் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.

பசலைக்கீரை நன்றாக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

தக்காளி வதங்கியதும், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விடவும், பின்பு ஒரு மூடியை கொண்டு மூடி 10 அல்லது 15 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.

பசலைக்கீரை நன்றாக வெந்ததும், ஒரு ஸ்பூன் சோளமாவு அல்லது அரிசிமாவு எடுத்துக்கொண்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொண்டு, இந்த கலவையில் சேர்த்து ஒரு முறை கொதிக்க வைக்கவேண்டும்.

அவ்வளவுதான் சுவையான பசலைக்கீரை சூப் தயார்.

இந்த பசலைக்கீரை சூப் இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் வாரத்தில் ஒருமுறை குடித்து வரவும். இவ்வாறு குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும் (hemoglobin increase food).

கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –>  Whatsapp Group Link