சணல் விதைகளை சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.!

Advertisement

சணல் விதை | Hemp Seeds in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் சணல் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க. இந்த சணல் விதைகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.  இந்த சணல் விதைகளில் உள்ள பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ,  மக்னீசியம், அமினோ அமிலங்கள்,  ஒமேகா 3,6 போன்ற கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை  தருகிறது.

இந்த சணல் விதைகளை உணவில் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியங்கள் கிடக்கின்றன, ஆனால் இது சிலருக்கு தெரிவதில்லை. மேலும் இந்த சணல் விதைகளை சாப்பிடுவதால் உடலில் என்ன பிரச்சனைகள் நீங்கும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

சாலியா விதை பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 

 சணல் விதை நன்மைகள் | Sanal Vithai Benefits in Tamil:

சணல் விதைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் உணவில் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி, மன நோய்,  மன அழுத்த பிரச்சனைகள், புற்று நோய்களுக்கான எதிர்ப்பு  சக்தி போன்றவற்றை அதிகரிப்பதற்கான எதிர்ப்பு சக்திகள் அதிகமாகவே உள்ளது.

இரத்த சர்க்கரை குறைக்கும் உணவு:

இரத்த சர்க்கரை

இந்த சணல் விதைகளில் புரோட்டீன்ஸ் அதிகமாக இருப்பதால் இவை சைவ பிரியர்களுக்கு நல்ல ஒரு உணவாக இருக்கும். இந்த சணல் விதைகளை தினமும் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கியங்கள் கிடைப்பதுடன் மட்டுமின்றி அதிகமான இரத்த சர்க்கரையினால் அவதிப்படுபவர்களுக்கு இதை தினமும் சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை குறைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

மாதவிடாய் பிரச்சனைகள்:

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகளினால் அவதிப்படும் பெண்கள், இந்த சணல் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணைகளை உணவில் சேர்த்து சாப்பிடுவதினால்  மாதவிடாயினால்  ஏற்படும் அதிகமான இரத்த போக்கு மற்றும் வயிற்று வலிகளை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. இந்த சணல் விதைகளில் உள்ள காம லினோலிக் அமிலம் ஹார்மோன்கள் சுரப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

இதயம் ஆரோக்கியம்:

இதயம் ஆரோக்கியம்

இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சணல் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்த சணல் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதயம் ஆரோக்கியமாகவும், பலவீனம் அடையாமலும் சுறுசுறுப்புடன் இருக்கும். அதோடுமட்டுமின்றி கீழ்வாதம், இரத்த அழுத்தம்  போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கிறது.

அழகு பராமரிப்பு:

அழகு பராமரிப்பு

இந்த சணல் விதைகளும் மற்றும அதன் எண்ணெயும்  முகத்திற்கு அழகு சேர்க்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. அதாவது முடி உதிர்வு, பொடுகு மற்றும் கை நகங்கள் வளர்வதற்கும் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு பெரும் உதவியாக இந்த சணல் விதைகள் இருக்கிறது.

சணல் விதைகளை சாப்பிடும் முறை:

இந்த சணல் விதைகளை சாலட்டாக உணவில் சேர்த்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் சணல் விதைகளை முளை கட்டி சான்ட்விச் உடனும் சாப்பிடலாம். மேலும் இந்த சணல் விதைகளில் இருந்து கிடைக்க கூடிய பாலை குடித்தாலும் நல்லது. எனவே நீங்களும் உங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தால் தினமும் சணல் விதைகளை சாப்பிடுங்கள்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement