Henna Powder For Hair Side Effects in Tamil
பொதுவாக மருதாணியை கையில் வைப்பதற்கு அனைவரும் ஆசைப்படுவார்கள். நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மருதாணி மரம் இல்லாத வீடுகளே கிடையாது. ஆனால் இந்த நவீன காலத்தில் அதற்கு எதிர்மறையாக தான் இருக்கின்றன. மருதாணியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கிறது. இத்தகைய மருதாணியை பார்த்தாலே அனைவரும் ஆசைப்படுவார்கள். அதுமட்டும் இல்லாமல் இப்போது மருதாணி பவுடரை Hair Pack செய்து அதிகமாக முடிக்கு உபயோகப் படுத்திக்கின்றனர். ஆனால் இந்த Hair Pack-கை முடிக்கு அப்ளை செய்வதிலும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை மற்றும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என்பது பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
மருதாணி பொடி:
மருதாணி பொடியை தலைக்கு பயன்படுத்துவதற்கு முன்பு நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை.
குறிப்பு- 1
மருதாணியில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. அதனால் மருதாணியை நிறைய முறையில் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பெரும்பாலும் முடி வளர்ச்சிக்கும் மற்றும் அழகிற்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் மருதாணி பொடியை நீங்கள் ஹேர் பேக்காக தலைக்கு தடவும் போது முகத்தில் படாதவாறு அப்ளை செய்ய வேண்டும்.
குறிப்பு- 2
அதேபோல உங்களுடைய முடிக்கு மருதாணி பவுடரை அப்ளை செய்வதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் இதில் ஒன்றை உங்களுடைய காது மற்றும் கழுத்து பகுதிகளில் தடவிக்கொண்டு அதன் பிறகு மருதாணி பவுடர் ஹேர் பேக் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு- 3
நீங்கள் மருதாணி பவுடரை தலைக்கு அப்ளை செய்வதற்கு முன்பு உங்களுடைய தலையை ஷாம்பு போட்டு நன்றாக அலச வேண்டியது மிகவும் அவசியம். தலை அலசிய பிறகு நீங்கள் தலைக்கு ஹேர் பேக் போட்டு கொள்ளலாம்.
குறிப்பு- 4
எப்போதும் நீங்கள் மருதாணி பொடியின் ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்தும் போது கையில் எதாவது கையுறை போட்டோ அல்லது சீப்பினாலோ அல்லது பிரஷினாலோ தான் உபயோகப்படுத்த வேண்டும்.
குறிப்பு- 5
இந்த ஹேர் பேக்கை எப்போதும் முன் நெற்றயில் இருந்து பின் நோக்கி தடவுங்கள். அப்போதும் முகத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது.
பக்க விளைவுகள்:
மருதாணி உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும் அதனை மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் தான் உபயோகப்படுத்த வேண்டும்.
மருதாணியை நேரடியாக அப்ளை செய்யும் போது அலர்ஜி, உடலில் தடிப்பு, உடலில் அரிப்பு மற்றும் முகத்தில் அரிப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
ஆகையால் நமது உடலுக்கு நன்மை தரக்கூடிய எதுவாக இருந்தாலும் அதனை சரியான அளவில் மற்றும் சரியான முறையில் எடுத்துக்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் ஏதும் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
இதையும் படியுங்கள்⇒ மருதாணி போட மருதாணி தேவையில்லை.! சர்க்கரை மட்டும் போதும் கை சிவந்துவிடும்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |