கால்சியம் அதிகம் உள்ள தானியம்
பொதுவாக நம் வீட்டில் அந்த காலத்தில் அனைத்து பொருட்களையும் பயன்படுத்துவது பழக்கம் ஆனால் இப்போது அதுபோல் ஒரு சில வீட்டில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் கேட்டால் அது பிடிக்கவில்லை என்கிறார்கள். பொதுவாக ஒரு குழம்பு செய்கிறோம் என்றால் அதற்கு அனைத்து பொருட்களையும் சேர்த்தால் மட்டுமே அது ருசியை கொடுக்கும். சிறிது பொருட்கள் குறைந்தாலும் அதனுடைய டெஸ்ட் மாறிவிடும். அதேபோல் தான் நம் உடலும் ஒரு சத்து குறைந்தாலும் உடலில் எதோ ஒரு பிரச்சனை வரும். அதனால் தான் நம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு சத்துக்கள் உள்ளது அதனால் தான் அனைத்து பொருட்களையும் சேர்க்கிறார்கள். அதேபோல் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது துவரம் பருப்பு எப்போதாவது யோசித்ததுண்டா இதற்கு எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்று. யோசித்து பதில் தெரிந்துகொள்ள நினைக்கும் ஆர்வம் உடையவர்கள் அனைவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும் வாங்க தெரிந்துகொள்வோம்..!
துவரம் பருப்பு நன்மைகள்:
துவரம் பருப்பு தினமும் நாம் குடிக்கும் பாலைவிட 6 மடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது இந்தியர்களுடைய கலாச்சரத்தில் நீண்ட தொடர்பு கொண்டது. இது 2020 நிலவரப்படி உலக உற்பத்தியில் 77% இந்திய மக்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கி.பி. 300 முதல் கி.பி., 400 ஆம் ஆண்டு காலத்தை சேர்ந்த கதாதப்சதி என்ற நூலிலும் இந்த பருப்பு ஊட்டச்சத்து களஞ்சியமாக உள்ளதாம்.
அதாவது 100 கிராம் துவரம்பருப்பில் 652 மி.கி கால்சியம் உள்ளது. அது மட்டுமில்லாமல் பாலில் 120 மி.கி கால்சியம் மட்டுமே உள்ளது என்று தெரியவந்துள்ளது. ஆகவே பாலை விட 6 மடங்கு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ள பொருள் துவரம் பருப்பு ஆகும்.கல்புர்கி ஆராய்ச்சி நிலையத்தின் பேசிய மூத்த விஞ்ஞானி டாக்டர் முனிசாமி தெற்கு கர்நாடகாவில் பயிரிடப்படும் பருப்பில் கால்சியம் உள்பட பல்வேறு சக்திகள் காணப்படுகின்றது என்றார். அந்த பருப்பில் காணப்படும் தோள்கள் விரைவில் ஜீரணமாகாது ஆகவே அதிலிருந்து தோளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒன்று தான் என்கிறார்.
இதற்கு பல வழிமுறைகள் நடந்து வருகிறது. அவ்வாறு நடைபெற்றுவரும் நிலையில் மற்றோரு ஆராய்ச்சியாளர் குல்தீப் சிங் கூறிருப்பதாவது துவரம்பருப்பில் பல்வேறு சத்துக்கள் உள்ளது. இதனை முழுமையாக மக்கள் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகிறது. அதுவரை மக்கள் அனைவரும் துவரம் பருப்பை பருப்பு சாதமாகவோ, சாம்பார், பருப்பு குழம்பு போன்றவற்றை சாப்பிட்டுவாருங்கள் என்கிறார்கள்.
இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News |