கர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்க சில வழிகள்..!

Advertisement

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்க சில வழிகள்..! Pregnancy Hip Pain Relief in Tamil..!

Pregnancy Hip Pain Relief in Tamil – கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் முதுகு வலி ஏற்படுவது மிகவும் பொதுவானதே, கர்ப்பகாலத்தில் முக்கால்வாசி பெண்கள் முதுகு வலியை எதிர்கொள்கின்றன. இந்த வலியின் தீவிரம் ஆரம்பகாலத்தில் அல்லது கர்ப்பகாலத்தில் போகப்போக வேறுபாடும். சிலருக்கு இரண்டாம் மூன்றாம் மாதங்களில் மிக மோசமானதாக இருக்கும்.இது மகப்பேறுக்கு பிறகும் நீடிக்கலாம் ஆனால் அது சில மாதங்களுக்கு பிறகு மறைந்துவிடும். ஆரம்பகாலத்தில் இதனுடைய தீவிரம் மிகவும் குறைவாக இருக்கலாம். கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் பிரசவத்திற்கு ஏதுவாக உடலை தயராக்கி தசைநார்கள் தளர்ந்து, நீட்சியடையும். கர்ப்பப்பை வளர வளர சிறுகுடல் மற்றும் இடுப்பெலும்பில் அதிகமாக அழுத்தம் ஏற்படும். இது முதல் மூன்று மாதகாலத்தில் கீழ் முதுகு வலியை ஏற்படுத்தும். புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிப்பினால் இடுப்பெலும்பு தளர்ந்து, மொத்த உடலும் பாதிக்கப்பட்டு கீழ் முதுகு வலி ஏற்படும். மூன்று மாதத்தின் ஆரம்பகாலத்தில் மனஅழுத்தம், பதட்டம், எடை அதிகரிப்பு, போஸ்ச்சரில் மாற்றம் அல்லது ஹார்மோனில் மாற்றம் போன்றவற்றினால் இடுப்பு வலி ஏற்படலாம்.

குற்ப்பிக்க கர்ப்பகாலத்தை கடக்க கடக்க குழந்தை வளர்ச்சியினால் எடை அதிகரிக்கிறது. இதனால் கீழ் முதுகில் அழுத்தம் ஏற்பட்டு இடிப்பு வலி ஏற்படுகிறது. இது பொதுவாக ஆரம்பகாலத்தில் இருந்து கடைசி மூன்று மாத காலம் வரை நடக்கிறது. சரி இந்த இடுப்பு வலியை போக்க உதவும் வழிகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

Hip Pain During Pregnancy in TamilPregnancy Hip Pain Relief in Tamil

தூங்கும் நிலை:

நீங்கள் எப்பொழுதும் ஒருபக்கமாக தூங்க வேண்டும் என்று சொல்வார்கள், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், கர்ப்பகாலத்தில் நீங்கள் ஃபிளாட்டாக படுப்பதற்கு சௌகரியமாக இருக்காது. ஒழுங்கான தூக்க நேரம் மற்றும் சரியான தூக்க பழக்கவழக்கங்களை பின்பற்றுவது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 7 மணிநேரம் தூக்கம் அவசியம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

தலையணை:

உங்களுக்கு சிறந்த ஆதரவளிக்கு தலையணையை வாங்குங்கள். தலையணையை கட்டியபடி தூங்குங்கள். அடிவயிற்றில் சுற்றி இருக்கும் பகுதி தளர்வடைய செய்வதுடன், கூடுதல் ஆதரவையும் வழங்கும். அதாவது கர்ப்பகாலத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யோக தலையணைகள் இடுப்பு வலியை போக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தை தூங்குவதற்கு ஏதுவாக இந்த தலையணை உருவாக்கப்பட்டுள்ளது. ஆக அதனை வாங்கி பயன்படுத்துங்கள்.

சூடான குளியல்:

கர்பிணிப்பெண்கள் தினமும் வெதுவெதுமான நீரில் குளிப்பதன் மூலமும், சூடான நீரில் துணியை நனைத்து ஒத்தடம் கொடுப்பதன் மூலம் இடுப்புவலி குறையும். இது ஒரு ஆரோக்கிய வழிமுறை என்றும் சொல்லலாம்.

மசாஜ்:

கர்ப்ப காலத்தில் இடுப்பு, கீழ் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது வலியை குறைக்க உதவும். குறிப்பாக ப்ரீநேட்டல் என்று அழைக்கப்படும் மசாஜை செய்வதன் மூலம். இடுப்பு வலி, பதட்டம், மன அழுத்தம் போன்றவை குறைக்க உதவும். மேலு உடனடி தீர்வு வழங்குவதுடன் தசை சுருக்கங்களை எளிதாக்கும்.

நீச்சல்:

நீச்சல் ப்ரீநேட்டல் உடற்பயிற்சியின் சிறந்த முறையாக கருதப்படுகிறது ஏனெனில் எடையில்லாது போல் உணருவீர்கள் இது மேலும் தண்டுவடத்தை அலுத்தாததால் இடுப்பில் எந்த எழுத்தமும் இருக்காது. நீச்சல் அடிப்பது உங்கள் தசைகள் கால்கள் மற்றும் கைகளுக்கு மெருகூட்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பகாலத்தில் பப்பாளி சாப்பிடலாமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil
Advertisement