Home Remedies for Urinary Infection in Tamil
ஒரு சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம் எனக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் மற்றும் கடுகடுப்பு ஏற்படுகின்றது. அப்படி உங்களுக்கும் இந்த மாதிரியான சிறுநீர் பிரச்சனைகள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் உங்களின் ஆரோக்கியத்தை நன்கு பாதுகாத்து கொள்வதற்கு உதவும் சில ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட குறிப்புகளை பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உள்ள சிறுநீர் தொற்று அனைத்தையும் போக்க உதவும் சில குறிப்புகளை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழித்தால் ஆரோக்கியம் என்று தெரியுமா
Home Remedies for Urine Infection in Tamil:
உங்களுக்கு உள்ள சிறுநீர் பிரச்சனைகளை போக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கருப்பு உளுந்து – 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 1 டம்ளர்
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கருப்பு உளுந்து மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் தண்ணீரை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடனே நாம் முன்னரே தயார் செய்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதனை காலையில் வெறும் வயிற்றில் பருகி கொள்ள வேண்டும்.
இதனை இரண்டு வாரத்திற்கு தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் உங்களுக்கு உள்ள சிறுநீர் தொற்று அனைத்தும் நீங்குவதை நீங்களே காணலாம்.
மேலும் ஒரு நாளைக்கு 3 – 4 லிட்டர் தண்ணீர் குடித்தாலே இது போன்ற சிறுநீர் அல்லது சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சிறுநீர் தொற்று இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |